156

1' பல்லுக்குத் தோற்ற பனிமுல்லை பைங்கிளிகள்
சொல்லுக்குத் தோற்றின்னந் தோற்றினவா--னெல்லுக்கு
நூறோஒநூ றென்பா ணுடங்கிடைக்கு மென்முலைக்கு
மாறோமா லன்றளந்த மன்.

இதனுள் 'நூறோஒநூ' றென்புழிப் பண்டமாற்றின்கண் அளபெடை வந்து வெண்பாவினுள் நாலசைச் சீராயிற்று. அவ்வாறு வருக என்னும் இலக்கணம் இன்மையால், அளபெடை அனுகரணமாம். (13)

120. கூன் வரும் இடமும், வெண்செந்துறையும்,
குறட்டாழிசையும் ஆமாறு

பாமுதல் நிற்பது கூன்வஞ்சி யீற்றினும் பாதத்துள்ளும்
ஆமிரண் டொத்து நிகழடி வெண்செந் துறையிழுகிப்
போமிசைச் செந்துறை சந்தஞ் சிதைகுறள் பூண்பலசீர்
தாமது வந்தங் குறைநவு மாங்குறட் டாழிசையே.

(இ - ள்.) பொருளோடு அடிக்கு முதலில் நிற்பது கூனாம்; அக்கூன் வஞ்சிப்பாவில் அடியிறுதி நடுவிலும் வரும்; இரண்டடி தம்முள் ஒத்து வருவது வெண்செந்துறை எனப்படும். செந்துறை இழிந்து ஒழுகிய ஓசையின்றி வருவதுவும், உதாரண வாய்பாட்டால் ஒரு குறள் வெண்பா ஓசைகெட்டு வருவதுவும், சீர் பலவாய் இரண்டடியாய் ஈற்றடி குறைந்து வருவனவும் குறட்டாழிசையாம் (எ-று.)

'குறைநவும்' என்றமையால், இவ்வோசையினிற் குன்றி வருதலே அன்றியும், அழிந்தழிந்து தனித்தனியும் வரப்பெறும் எனக் கொள்க. 'அது' என்ற அதிக வசனத்தால், விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் இன்றிச் செந்துறை சிதைந்தது தாழிசைக் குறளாம்.

வரலாறு:-

2'ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை.

இஃது இரண்டடியும் ஒத்து வந்தமையால், வெண்செந்துறை.


1. யாப்ப - வி. 4-ஆம் சூ. மேற்கோள்.

2. முதுமொழிக் காஞ்சி, 1.