157

1'அறுவர்க் கறுவரைப் பெற்றுங் கவுந்தி
மறுவறு பத்தினி போல்வயி னீரே.

இது செந்துறைச் சிதைவுத் தாழிசைக்குறள், விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் இல்லாமையால் என்க.

2'வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள்
பண்டைய ளல்லள் படி.

இது சந்தழி குறட்டாழிசை.

'போதி நிழலிற் புனிதன் பொலங்கழல்
ஆதி யுலகிற் காண்.

இது ஈற்றடி குறைந்து தனியே வந்த குறட்டாழிசை. பிறவுமன்ன.

(14)

121. வெளி விருத்தமும், ஓசை கெட்ட சிந்தியல் வெண்பா வெண்
டாழிசையாம் என்றலும், ஓசை கெட்ட நேரிசை வெண்பா
வெண்டுறையாம் என்றலும், வெண்டாழிசையும்

நான்கொடு மூன்றடி தோறுந் தனிச்சொல்லு நண்ணுமெனில்
தான்பெயர் வெள்ளை விருத்தம்;முப் பாதந் தழுவிவெள்ளை
போன்றிறும் வெண்டா ழிசை;மூன் றிழிவே முடிபொருந்தி
ஆன்றவந் தங்குறை யின்வெண் டுறையென்ப ராயிழையே!

(இ - ள்.) வெளி விருத்தமாவது, மூன்றடியானும் நான்கடியானும் வந்து, அடிதோறும் முடிவிடத்துத் தனிச்சொற்பெற்று முடிவதாம். சிந்தியல் வெண்பா ஓசை கெடில் வெண்டாழிசையாம்; நேரிசை வெண்பா ஓசைகெடில் வெண்டுறையாம். அல்லாமலும், மூன்றடிச் சிறுமை ஏழடிப் பெருமையாய்ப் பின்பிற்சிலவடி சீர் குறைந்து வருவனவும் வெண்டாழிசையெனக் கொள்க (எ-று.)

வரலாறு:-

3'கொண்டல் முழங்கினவாற் கோபம் பரந்தனவால் என்செய்கோயான்
வண்டு வரிபாட வார்தளவம் பூத்தனவால் என்செய்கோயான்
எண்டிசையுந் தோகை யிசைந்தகவி யேங்கினவால் என்செய்கோயான்.

எனவும்,


1. யாப்ப - வி. 64-ஆம் சூ. மேற்கோள்.
2. யாப்ப - வி. 64-ஆம் சூ. மேற்கோள்.
3. யாப். காரிகை . செய். 6 மேற்கோள்.