158

'மருளறுத்த பெரும்போதி மாதவரைக் கண்டிலமால் என்செய்கோயான்
அருளிருந்த திருமொழியா லறவழக்கங் கேட்டிலமால் என்செய்கோயான்
பொருளறியு மருந்தவத்துப் புரவலரைக் கண்டிலமால் என்செய்கோயான்

எனவும், இவை மூன்றடியாய் 'என் செய்கோயான்' எனுந் தனிச்சொற்பெற்று வந்த வெளி விருத்தம்.

'கல்லார் நாவிற் கட்டுரை கொள்வார் புகழெய்தார்
புல்லார் வாயிற் சொற்றெளி வுற்றார் புகழெய்தார்
நல்லார் மேவு நண்பு துறந்தார் புகழெய்தார்
இல்லா ராய்நின் றின்ப முவந்தார் புகழெய்தார்.

இது நான்கடியாய் 'புகழெய்தார்' என்னுந் தனிச்சொற் பெற்று வந்த வெளி விருத்தம்.

இனி வெண்டாழிசை வருமாறு:-

1'நண்பி தென்று தீய சொல்லார்
முன்பு நின்று முனிவு செய்யார்
அன்பு வேண்டு பவர்.

இது சிந்தியல்வெண்பாச் சிதைந்து தனியே வந்தது.

2'அன்னா யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி
ஒன்னா ருடைபுறம் போல நலங்கவர்ந்து
துன்னான் துறந்து விடல்;

'ஏடீ யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி
கூடா ருடைபுறம் போல நலங்கவர்ந்து
வீடான் துறந்து விடல்;

'பாவா யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி
மேவா ருடைபுறம் போல நலங்கவர்ந்து
காவான் துறந்து விடல்.

இவை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வந்தன.

3'குலாவணங்கு வில்லெயினர் கோன்கண்டன் கோழி
நிலாவணங்கு நீர்மணல்மேல் நின்று-புலாலுணங்கல்
கொள்ளும்புட் காக்கின்ற கோவின்மை யோநீபிறர்
உள்ளம்புக் காப்ப துரை.


1. யாப்ப - வி. 15-ஆம் சூ. மேற்கோள்.
2. யாப்ப - வி. 66-ஆம் சூ. மேற்கோள்.
3. யாப்ப - வி. 22-ஆம் சூ. மேற்கோள்.