163

வரலாறு:-

'புரவுதரு குடியாகிப் புயல்வண்ணன் விரும்பியதூஉம் பொழில்சூழ் காஞ்சி
கரியசுடர் வீதிதொறு முலாப்போந்து கவர்வதூஉங் கலைசூழ் காஞ்சி
நிரைவளையிவ் வுலகுய்ய நின்றுதவஞ் செய்வதூஉ நிழல்சூழ் காஞ்சி
சுரமகளிர் பாடுவதும் பயில்வதூஉஞ் சொன்மாலை தொடுத்த காஞ்சி.

இஃது ஆசிரியமண்டில விருத்தம். 'இதனோடு வெளி விருத்தத்திற்கு வேறுபாடியாதோ?' எனின், வெளிவிருத்தம் அளவடியான் வரும். இது வேற்றுமை.

'அன்றயனை யுந்தியி னளித்தபரன் மேவுவது மத்தி கிரியே
சென்றுகரி கவ்வுமுத லைக்கணற மேவுவது மத்தி கிரியே
வென்றவன் வணக்குவது மேலில கெயிற்றரிய தான வரையே
தன்றொழின் முருக்குவது தாளில கெயிற்றரிய *தான வரையே.

இதுவும் அது.

'துனைவருநீர் துடைப்பவராய்த் துவள்கின்றேன் துணைவிழிசேர் துயிலைநீக்கி
இனவளைபோ லிளநலஞ்சோர்ந்திடருழப்ப விகந்தவர்நாட் டில்லைபோலுந்
தனியவர்கள் தளர்வெய்தத் தடங்கமலந் தளையவிழ்க்குந் தருண வேனிற்
பனிமலரின் பசுந்தாது பைம்பொழிலிற் பரப்பிவரும் பருவத் தென்றல்.

இஃது ஆசிரிய நிலை விருத்தம். இவ்வினமனைத்தினையும் ஓரடி குறைந்து வந்த துறை நேரிசைத்துறை என்றும், நேரிசை ஆசிரியப்பாவிற்கு இனமென்றும்; இரண்டடி குறைந்து வந்த இணைக்குறட்டுறை இணைக்குறள் ஆசிரியப்பாவிற்கு இனம் என்றும்; அடிதோறும் பொருள் பெற்று வந்த ஆசிரியவிருத்தம் அடிமறிமண்டில ஆசிரியப்பாவிற்கு இனம் என்றும்; நிலைவிருத்தம் நிலைமண்டில ஆசிரியப்பாவிற்கு இனம் என்றும்; தாழிசை நிலைமண்டில ஆசிரியப்பாவிற்கு இனமென்றும் வேண்டுவாருமுளர். இவையெல்லாம் உய்த்துணர்க. இன்னும் பலவாகவும் கூறுப.

(16)

123. கலித்தாழிசையும், கலி விருத்தமும், கலித்துறையும்

ஈரடி யாதி யெனைத்தடி யாலும்வந் தீற்றில்நின்ற
ஓரடி நீளிற் கலித்தா ழிசை;ஒலி யோர்விருத்தம்
நேரடி நான்காய் நிகழுமென் றார்;நெடி லென்றுரைத்த
பேரடி நான்கு கலித்துறை யாமென்பர் பெய்வளையே !


* 'கைம்மலை யொப்பத் தானவரை யென்றார் குவலயாபீடத்தை' என்பது பழைய குறிப்பு.