165

இவ்வினமனைத்தினும் அளவடியின் மிக்கு வருவன வெண்கலிப்பா இனம் என்றும், கலித்தாழிசை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருவன நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா இனம் என்றும், கலித்துறையும் தனித்து வருங் கலித்தாழிசையும் தம்முளொத்தும் ஒவ்வாதும் வருங் கலிவிருத்தமும் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாஇனம் என்றும் வேண்டுவாருமுளர். இனிக்கலித்துறையைக் கோவைக் கலித்துறை என்றும், காப்பியக் கலித்துறை என்றும் இரண்டாக்குவார் எனக் கொள்க.

(17)

124. கோவைக் கலித்துறை ஆமாறு

நெடிலடி நான்கவை நேர்ந்துநின் றேபதி னாறெழுத்தாய்
முடிவன வாம்பதி னேழு நிரைவரின் முன்மொழிந்த
படிவழு வாது நடைபெறு மோசைவண் டேந்திநின்ற
கடிகமழ் கோதைக் கயனெடுங் கண்ணி! கலித்துறையே.

(இ - ள்.) இதனைக் கோவைக் கலித்துறைக்கு இலக்கணமும் இலக்கியமுமாகக் கொள்க. 1'முன்றான் பெருமை' காப்பியக் கலித்துறை.

(18)

125. வஞ்சித்துறையும், வஞ்சிவிருத்தமும், வஞ்சித்தாழிசையும்,
பாக்களின் ஒழிபும்

துன்னுங் குறளடி நான்குவஞ் சித்துறை; சிந்தடிநான்(கு)
உன்னும் விருத்தம்; துறைமூன் றொருபொருள் தாழிசையாம்;
இன்னும் வரினு மடக்குக போலியென் றேற்பமுன்னூல்
பன்னு மவர்க்கு முடம்பா டெனவறி பைந்தொடியே !

(இ - ள்.) குறளடி நான்காய் வருவது வஞ்சித்துறையாம்; சிந்தடி நான்காய் வருவது வஞ்சி விருத்தமாம்; வஞ்சித்துறை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருவது வஞ்சித் தாழிசையாம்; ஒழிந்த செய்யுட்களையும் ஒப்புமையாக இப்பெயர்களிலேயே வழங்குக என்பது எல்லாப் புலவர்க்கும் உடன்பாடு (எ-று.)

வரலாறு:-

2'பொருந்து போதி

என்பது இருசீரடி நான்காய் வந்தமையால், வஞ்சித் துறை.

3'விண்ணவர் நாயகன்

என்பது சிந்தடி நான்காய் வந்தமையால், வஞ்சி விருத்தம்.


1. இந்நூல், 125-ஆம் பக்கம்.
2. இந்நூல், 124-ஆம் பக்கம்.
3. இந்நூல், 125-ஆம் பக்கம்.