170

126. பாக்களை முற்கூறிய பெயர்களால் அல்லாமல்
வேறு பெயர்களால் வகுத்து, வேறு இலக்கணமும் கூறுகின்றார்

மேவுங் குறள்சிந் தொடுதிரி பாதிவெண் பாத்திலதம்
மேவும் விருத்தஞ் சவலையென் றேழு மினியவற்றுள்
தாவு மிலக்கணந் தப்பிடி லாங்கவை தம்பெயரால்
பாவு நிலையுடைப் போலியு மென்றறி பத்தியமே.

(இ - ள்.) குறளும், சிந்தும், திரிபாதியும், வெண்பாவும், திலதமும், விருத்தமும், சவலையும் என்று ஏழு வகைப்படும் பத்தியக்கவி எனக் கொள்க; இனி இவ்வேழும் தத்தம் இலக்கணத்தின் மிக்கும் குறைந்தும் வரின், போலி என்பனவாம்; குறட்போலி, சிந்துப் போலி, திரிபாதிப் போலி, வெண்பாப் போலி, திலதப் போலி, விருத்தப் போலி, சவலைப் போலி என வருமெனக் கொள்க(எ-று)

(20)

127. குறள், சிந்து, திரிபாதி, வெண்பாக்கள் ஆமாறு

எழுசீ ரடியிரண் டாற்குற ளாகும்; இரண்டடியொத்
தழிசீ ரிலாதது சிந்தாம்; அடிமூன்று தம்மிலொக்கில்
விழுசீ ரிலாத திரிபாதி; நான்கடி மேவிவெண்பாத்
தொழுசீர் பதினைந்த தாய்நடு வேதனிச் சொல்வருமே.

(இ - ள்.) எழுசீர் அடி இரண்டாய் வருவது குறளாம்; அடி இரண்டாய்த் தம்முள் அளவொத்தது சிந்தாம்; மூன்றடியாய்த் தம்மில் அளவொக்கில் திரிபாதியாம்; நான்கடியாய்ப் பதினைந்து சீராய் நடுவு தனிச்சொல் வருவது வெண்பாவாம் எனக் கொள்க (எ-று.)

வரலாறு :-

1.' உளரென்னு மாத்திரைய ரல்லாற் பயவாக்
களரனையர் கல்லா தவர்.' - ( இதன் தொட்ச்சி பின்பக்கம் உள்ளது.)'

இது முதலடி நாந்சீராய்க் கடையடி மூச்சீராய் வந்த குறள். இனிக் குநட்டூபாலியாவது , எழுசீரின் மிக்கும் குறைந்தும் இரண்ட்டியாய் அவ்வடியும் குறட்போலியாம் .

வரலாறு:-

'உற்றவர்க்குறுப் பறுத்தெரியின்க ணுய்த்தலையன்ன
தீமைசெய்தோர்க்கு மொத்தமனத்ததாய்
நற்றவர்க்கிட மாகிநின்றது நாகையே.


1. திருக்குறள், 406.