173

இது நடுவு தனிச்சொல் இன்றி மூன்றாம் அடி குறைந்து நான்கடியாய்ப் பதினைந்து சீராய் வந்தது.

1'கடற்குட்டம் +போழ்வர் கலவர்
படைக்குட்டம் பாய்மா வுடையா னுடைக்கிற்குந் தோமில்
தவக்குட்டந் தன்னுடையா னீந்தும்
அவைக்குட்டங் கற்றான் கடந்து விடும்.

இது முதலடியும் மூன்றாமடியும் குறைந்து, ஏனையடிகள் நீண்டு, மேல் இரண்டடியும் ஓரெதுகையாய், கீழ் இரண்டடியும் ஓரெதுகையாய் வந்த வெண்பாப் போலி.

'கறைப்பற் பெருமோட்டுக் காடுகிழ வோட்கொத்
தரைத்திருந்த சாந்துகொண் டப்பேய்
மறைக்குமாங் காணாது வன்பேய்தன் கையைக்
குறைக்குமாங் கூன்கத்தி கொண்டு.

இது தனிச்சொலின்றி வந்த வெண்பாப்போலி. இனி இன்னிசை வெண்பா என்பதொன்றுண்டு. அதுவும் வெண்பாப் போலியிலே அடங்கும் என்பது மேலே சொல்லியவற்றால் தானே விளங்கும்.

'ஒன்றும் பலவும் விகற்பாகி நான்கடியாய்
நின்று தனிச்சொற்றாம் பெற்றும் பெறாதொழிந்துந்
தன்னிசைய நேரிசையின் வேறாய் வருமாகில்
இன்னிசைவெண் பாவாமென் றார்.

இஃது இன்னிசை வெண்பாவிற்கு இலக்கணமும் இலக்கியமுமாகக் கொள்க. இனித் திலதமாமாறு சொல்லுகின்றான்.

(21)

128. திலதம் ஆமாறு

நேர்முந் துறிற்பதி னாறெழுத் தாகி நிரைமுதலாஞ்
சீர்முந் துறிற்பதி னேழாய் முடிந்துசெப் பாரடிகள்
ஏர்முந்து நான்கொத் திருபது சீரா லியன்றிடுமேல்
தேர்முந்து பேரல்குன் மாதே ! அஃது, திலதமன்றே.

(இ - ள்.) நேரசை முந்தின் பதினாறு எழுத்தாய், நிரையசை முந்தின் பதினேழ் எழுத்தாய் முடியும் பாதங்கள் நாலாய்ச்


1. நான்மணிக்கடிகை , 18.
+ 'போழ்வ ரகல்வர் எனினு மமையும்,' என்பது பழைய குறிப்பு.