174

சீர் இருபதினால் வருவது *திலதமென்னும் பெயராலே வழங்கப்படும்.(எ-று.)

இந் நூற்சூத்திரம் யாவுந் திலதமாதலின், இதனில் ஒன்றையே இலக்கியமாகக் கொண்டாலும் இழுக்காது.

வரலாறு:-

'முருகார் நறுமல ரிண்டை புனைந்துவண் டேமுரலும்
பெருகார் சடைமுடிக் கற்றையி னாய்பிணி யான்மிடைய
இருகாற் குரம்பை யிதுதா னுடைய னிதுபிரிந்தால்
தருவா யெனக்குன் றிருவடிக் கீழோர் தலைமறைவே.

'நிணஞ்செய்த வெண்டலை யேந்திய நின்மல நேரிழையை
மணஞ்செய்ய வான்றுகி றோன்றுவித் தார்மதி தோய்வரையிற்
கணஞ்செய்த காந்தள்பைம் போதோ டுகவினை யேன்மணமோ
பணஞ்செய்த வல்குலுங் கொங்கையுங் காட்டிப் பறிக்கின்றதே.

இவையிற்றைக் கலித்துறை என்பாருமுளர்.இனித் திலதப் போலியாவது, ஒரோவடியில் ஒன்றாதல் இரண்டாதல் எழுத்து மிக்கும் குறைந்தும் வருவது.


* 'கலித்துறை, கட்டளைக் கலித்துறை எனவும், காப்பியக் கலித்துறை எனவும் இருவகைப்படும். அவற்றுள் கட்டளைக் கலித்துறை, கோவைக் கலித்துறை எனவும், திலதக் கலித்துறை எனவும் இரண்டு வகையாகும். இவை தம்முள் பேதமறியாது பெரும்பாலோர் ஒன்றை ஒன்றாக்கி மயங்குப. இவற்றை வேறுபடுத்துவான்றொடங்கி நூலாசிரியர், 'நெடிலடி' (165-ஆம் பக்கம்) என முன்னர்ப் போந்த சூத்திரத்தால் கோவைக் கலித்துறையையும், இச்சூத்திரத்தால் திலதக் கலித்துறையையும் உணர்த்தியும், உரையாசிரியர் அவருடைய கருத்துத் தெரியாது ஆண்டுக் குற்றங்காட்டுதற்கு எடுத்தோதினார் என மயங்கி, 'நெடிலடி' என்னுஞ் சூத்திரத்தையே 'கோவைக் கலித்துறைக்கு இலக்கணமும் இலக்கியமுமாகக் கொள்க' என்றார். அச்சூத்திரமுந் திலதக் கலித்துறையேயாம். அஃது 'கடிகமழ் கோதைநல் லாய்பன்னு கோவைக் கலித்துறையே' என்று இற்ற வழியன்றோ கோவைக் கலித்துறையாகும். கோவைக் கலித்துறை ஈற்றடி மூன்றாஞ் சீர்ச்சொல் பக்குவிட்டு முற்சீரோடு ஒன்றி ஒழுகிய ஓசைத்தாய் வரும். இது பேதமறிக. இரண்டாஞ்சீர் நாலாஞ்சீர்களும் அவ்வாறோசை பிரிந்தொழுகின் மிக்க சிறப்புடையதாம். அதனை 'நீரணங் கோநெஞ்ச மேதனி யேயிங்கு நின்றவரே' (தஞ்சை. கோ. 2.) என்னும் பொய்யாமொழிப் புலவ் வாக்கானுணர்க.' என்பது பழைய குறிப்பு.