175

வரலாறு:-

'எனவே தனமென் றிராசேந்திர சிங்கனொ டின்றணைந்த
கனவே யுடையன் களிப்புக்கண் டாற்கட லேழுமமைந்
தனவே யெனவவன் றானுதித் தன்றே தொடங்கியென்று
நனவே புணர்திரு வின்களிக் கேதுகொ னல்லனவே.

இது முதலடியெழுத்து மிக்கமையால் திலதப்போலி. இதனை வடவெழுத்தாய் ஒப்புக்கொளின் போலியின்றி விரவியலாகுமென்க.

(22)

129. விருத்தம் ஆமாறு

அளவோ ரடிபோ லொருநான்கு பேத மிலாதுமெய்ப்ப
துளதே லஃது விருத்தமென் றேயறி; உள்ளங்கொள்ளுங்
களவே நுழைந்து கயலினு நீண்டு கடுவடுவின்
பிளவே யனைய பெருமதர் நாட்டத்துப் பெய்வளையே !

(இ - ள்.) தம்மில் ஒத்த அடி நான்காய் வருஞ்செய்யுள் விருத்தமெனப்படும்
(எ-று.)

வரலாறு:-

'பொலங்கலக் குரியவாம் பொருவின் மாமணி
இலங்கல தென்னல மீயஞ் சேர்ப்பினுங்
குலங்கலந் திவ்வழிக் குரவர் கூட்டினு
மலங்கலங் குழலிய ரன்றென் கிற்பரோ.

இஃது அடி நான்கும் ஒத்தமை காண்க. குண்டலகேசி முதலான காப்பியம் எல்லாம் விருத்தமாம். விருத்தப் போலியாவது அடிகளில் எழுத்தாதல், சீராதல், மிக்கும் குறைந்தும் வருவதாகும். அது வந்தவழிக் காண்க.

(23)

130. சவலையும், சவலைப் போலியும்

இடையு முதலுங் கடையுங் குறைந்து மிடையிடையே
அடையு மடிகுறைந் தும்வரி னான்கடி யப்பெயரால்
நடைமுந் தியன்ற சவலையென் றோதுவர்; நான்கின்மிக்க
தொடையுந் திறம்புவ தாய்விடிற் போலி துடியிடையே !

(இ - ள்.) முதலடி கடையடி இடையடிகள் குறைந்தும் மிக்கும் வரின் சவலையாம்; முதலடி குறைந்து வரின் முதற் சவலையாம்; கடையடி குறைந்து வரின் கடைச் சவலையாம்; இடையடி குறைந்து வரின் இடைச் சவலையாம்; நான்கடியின் மிக்க அடிகளால் நடைபெற்று, அவ்வடிகள் ஒத்தும் ஒவ்வாதும் வரின் சவலைப் போலியாம் (எ-று.)