178

(இ-ள்.) சந்தங்களைப் பிரத்தரித்துக் காட்டுதற்கு எடுத்துக்கொண்டான்; அஃது ஆதி முழுக் குருவைத்து உறழ்கையும், ஆதி முழு இலகு வைத்து உறழ்கையும் என இரண்டு வகைப்படும். அவற்றுள் ஆதி முழுக் குரு வைத்து உறழ்கையாவது, இன்னதனை ஒரு சந்தமென்று உறழ்ந்து காட்டுக என்றால், முழுக் குருவடியை மேல் வைத்து முதற் குருவின்கீழ் ஓரிலகு வைத்து ஒழிந்தனவெல்லாம் ஒக்கவிட இரண்டாம் அடியாம்; இரண்டாம் அடியின் முதற் குருவின்கீழ் இலகுவிட்டுப் பின்பு மேலைப்படியோடு ஒக்கவிட்டு முன்பு குருவிட மூன்றாமடியாம். மற்றையவும் இவ்வாறே ஒட்டிக் கொள்க.

'குருக்கீழ் இலகுவா மேனைய தொக்குங்
குருத்தொகையு மாதிக்கட் கூட்டு.'

இனி ஆதி முழு இலகு வைத்து உறழுமாறு, அச்சந்தத்தின் முழு இலகு வைத்து அதன் முதலிலகுவின்கீழ்க் குரு வைத்து ஒழிந்தன ஒப்பிக்க இரண்டாமடியாம். பின்னையும் இதன் முதல் இலகுவின் கீழ்க் குரு வைத்துப் பின் ஒக்கவிட்டு முன்பு இலகுவிட மூன்றாமடியாம்; ஒழிந்தனவும் இவ்வாறே ஒட்டிக் கொள்க. மேலும் முழுக்குரு உறழ்ச்சியோடு மாறுபடாமை உறழ்க.

'இலகுவின் கீழ்க்குருவா மேனைய தொக்கு
மிலகு வெழுவா யிடத்து.'

(28)

135. நட்டம் என்னும் தெளிவுக்கு இலக்கணம்

ஏறு மடியெனைத் தாவது கெட்டதென் றாலவ்வெண்ணைத்
தேறும் படியரை செய்தி லகுக்கொள்க சேரினொற்றை
வேறு முருவொன்று பெய்தரை செய்து வியன்குருவைத்
தீறு திகழு மளவு மியற்றுக விப்படியே.

(இ-ள்.) நட்டமென்னுந் தெளிவிற்கு இலக்கணஞ் செய்வா னெடுத்துக்கொண்டான்; ஆதி முழுக் குருவின் நட்டமும் ஆதி முழுவிலகுவின் நட்டமும் என இரண்டு வகைப்படும்; அவற்றுள் இஃது ஆதி முழுக் குருவின் நட்டத்துக்கு இலக்கணம் எனக்கொள்க. இன்ன சந்தத்தில் இன்னதனையாம் அடியில் இட்டது அறி என்றால் அவன் சொன்ன அடித்தொகையைப் பாகஞ்செய்து இலகு வைக்க. பாகஞ்செய்யப் போகாதாகில் ஒன்றிட்டுப் பாகஞ்செய்து குரு வைக்க; இப்படி வெறிதே பாகஞ்செய்ய இலகுவாம்; ஒன்றிட்டுப் பாகஞ் செய்யிற் குருவாம்; அவன் கருதின