18

உடலாம் - 1வருமொழி முதல் தகாரம் வந்து புணர்ந்தால், வந்த தகாரமானது றகாரமாம்; எய்தும் ஆவியின் பின் ஆற்றும் திறல் வல்லினம் வந்திடில் அவற்றின் வருக்கம் போற்றும் இவையென்ற வல்லொற்றும் மெல்லொற்றும் புக்கிடுமே - 2உயிரீற்று நிலைமொழிப் பதத்தின் பின்னர் வருமொழி முதல் வல்லினம் வந்து புணர்ந்தால், இடையே அவ்வவ்வந்த வல்லொற்றும் வல்லின வருக்கவொற்றும் மிக்கு முடியும் (எ-று.)

(20)

21. குற்றியலுகரம் உயிர்வரக் கெடுதலும், குற்றியலுகரத்தின்
அயல் மெல்லொற்று வல்லொற்றுதலும், அவற்றின் முன் வல்லொற்று மிகுதலும்,
சில முற்றியலுகரங்களும் உயிர் வரக் கெடுதலும்

ஆவிபின் றோன்றக் கெடுங்குற் றுகரம்; அவற்றின்மெல்லொற்
றேவிய வாறெழில் வல்லொற்று மாம்;இனி வன்மையொற்று
மேவி யதன்முன் விளைதலும், வேண்டுவர்; ஆவிவந்தாற்
பாவிய முற்றுக ரத்தின் சிதைவும் பகர்ந்தனரே.

(இ-ள்.) ஆவி பின் தோன்றக் கெடும் குற்றுகரம் - 3நிலைமொழியீற்றுக் குற்றியலுகரத்தின் பின்னர் வருமொழி உயிர்முதலாகிய மொழி வந்து புணர்ந்தால், அந்நிலைமொழியீற்றுக் குற்றியலுகரமானது தனக்கு ஆதாரமாகிய மெய்யைவிட்டுத் தான் கெடும்;


1. பொன் + தண்ணிது = பொன்றண்ணிது.

(பொன்னன்று முதலிய இரண்டும் வேறு பிரதியில் உள்ள உதாரணங்கள்.)

வல்லொற்று

2. விள + குறிது = விளக்குறிது.
தாரா + கடிது = தாராக் கடிது.
விள + கோடு = விளக்கோடு.
பலா + காய் = பலாக்காய்.

மெல்லொற்று

விள + காய் = விளங்காய்.
மா + சோலை = மாஞ்சோலை (வேறு பிரதியின் உதாரணங்கள்)
மா + தளிர் = மாந்தளிர்.
காயா + பூ = காயாம்பூ.

3. நாகு + அரிது = நாகரிது.
நாகு + அருமை = நாகருமை.