180

விருத்தம் எத்தனை? என்று இப்படி ஏற வினாவினால், சந்தத்தில் எழுத்துக்களை வீடு வகுத்து இரண்டு முதல் மூன்று நாலைந்தெனக் கீழ்நின்று மேல் நிறுத்திப் பின்னையும் இடநின்று வலநோக்கி முன் வைத்த திரள்களே ஈறாக்கி இரண்டின் வீடிசையவிட்டுப் பின்பு ஒவ்வொரு பந்தியினும் ஒரு வீடு குறைய வகுத்து வீடு தோறும் அதனயல் வீட்டிலக்கங்களைத் தொகுத்து வைத்து மேல் நின்று கீழ் நோக்கி எண்ண ஓரிலகு முதலாகவுடைய விருத்தங்களாம். அவை எல்லாங் கூட்டி முழுக் குருவிலகுவை இடத்தொகையாம். (எ-று.)

'ஒன்றிரண்டு மூன்றுநா லஞ்சாறே ழெட்டொன்ப
தென்றுகொண் டிச்சை யளவுவரி--யொன்றிலொன்
றிட்டிட் டிறுதி யொழித்தொழிய வேகாதி
யொட்டி யிலகுகொண் டொட்டு.'

(31)

138. சந்தத்தின் தொகை முதலியன அறியும் விதம்

தொகைநான் கிடமிட் டெழுத்தான் முரணித் தொடருமரை
தகையாத வண்ண நடுவண வாற்றித் தருங்கடையிற்
சிகையாக விட்டெழுத் தோடில குக்களுஞ் சீர்க்குருவும்
மிகையாகு மாத்தி ரையுமடை வேயறி மெல்லியலே !

(இ-ள்.) தான் கருதின சந்தத் தொகையை நான்கிடத்து வைத்து அச்சந்தத்தின் எழுத்தான் நான்கிடத்து முரணி நடுவிரண்டு படியையும் பாகஞ்செய்து கடைப்படியினோர் பாகங் கூட்டி வைத்தால் கீழைப்படியின் முதலச்சந்த எழுத்தின் தொகையாம்; இரண்டாவது இலகுவாம்; மூன்றாவது குருவாம்; நான்காவது மாத்திரையாம் (எ-று.)

'விருத்த வடியினை வேறைந்தா நாட்டி
விருத்த வடியெழுத்தான் மேனான்கு மாறி
யரைத்தகு நடுவின்மூன் றொடுநான்கா யக்குப்பை
யொருக்கவைந் திரட்டி யெழுத்தொடு முறழ
விருத்த வரியின் விரிவி லெழுத்துக்
குருக்களோ டேனைக் குறைவி லிலகு
விருத்தமாத் திரைமுழு மாத்திரை *யைந்தும்
விரித்து விகற்பித்து வேண்டப் படுமே.'

(32)


* 'ஐந்தாவதோர் பயனில் குறியீடு. அஃதாசிரியர்க்குடன்பாடன்று,' என்பது பழைய குறிப்பு.