183

அபிகிருதி யுற்கிருதி யாமெழுத்தா லென்றா
ரிருபதின்மே லாறு மிவை.'

*உத்தம், அதியுத்தம், மத்திமம், நிலை, நன்னிலை, காயத்திரி, உண்டி, அனுட்டுப்பு, பகுதி, பந்தி, வனப்பு, சயதி, அதிசயதி, சக்குவரி, அதிசக்குவரி, ஆடி, அதியாடி, திருதி, அதிதிருதி, கிருதி, பிரகிருதி, ஆகிருதி, விக்கிருதி, சங்கிருதி, அபிகிருதி, உற்கிருதி எனச் சந்தம் எழுத்து வகையால் இருபத்தாறு பேதமாம்.

வரலாறு:-

'கார், நேர், வார், யார்'

உத்தம்.

'போதி, யாதி, பாத, மோது'

அதியுத்தம்.

'வேரம் போய்
மாரன் சீர்
சேருங் கால்
நேர்வன் யான்'

மத்திமம்.

'போதி நீழற்
சோதி பாதங்
காத லானின்
றோத னன்றே'

நிலை.

'மன்ன னேரியன்
சென்னி மானதன்
கன்னி காவலன்
பொன்னி நாயகன்'

நன்னிலை.


* "உத்தமாவது, ஒற்றொழித்து உயிராவது, உயிர்மெய்யாவது, பாதம் ஒன்றற்கு ஓரெழுத்தாய் வருவது. மற்றைய நிரலே ஒவ்வொன்றற்கு ஓரெழுத்துக் கூடி ஈற்றின் நின்ற உற்கிருதி பாதமொன்றற்கு இருபத்தாறெழுத்துப் பெற்று முடியும். இது வடமொழி விதி. தென் மொழியார் எழுத்திலக்கங் கொள்ளாது, மாத்திரையே கொள்வர். ஆயினும், இரண்டும் ஒத்து நடப்பதே யதிக சிறப்புடையது. அது குண்டலகேசி, சிந்தாமணி, பாரதம் முதலிய காப்பியங்களிற் காண்க."

+ தமிழ் நூலாருள் ஒரு சாரார் மாத்திரையே நோக்கித் துதி, மதி, யதி, பதி என வருவதனையும் இதன்பாலாக்குப. உரையாசிரியர் சந்தங்களுக்கு எடுத்துக் காட்டிய உதாரணச் செய்யுள்களிற் சில எழுத்தைச் சந்தத் தொகைக்கேற்ப மாற்றியிருக்கின்றனர் போலும்." என்பன பழைய குறிப்பு.