185

நெறியார் சடையாய் நினபாத
மறிவா ரினியா ரறிவாரே.'

பந்தி.

'பற்றொன் றோவில ராகி யொழுகுத
லற்றன் றேலறி விற்றெளிந் தாற்றுத
லொற்றொன் றானு மிலர்தார் பிரிவரே
மற்றொன் றென்னை மயக்குவ தேகொலோ.'

வனப்பு.

'உருண்ட தேர்மேற் செலவுந்த னுள்ளமா
மருண்ட தேர்மிசை மாதர்கண் மீட்சியுங்
கருண்ட வாளுடைக் காள னொருவனே
யிருண்ட தேர்மிசை யெவ்வா றியங்கினான்.'

சயதி.

'பரிசில வெம்மொடு போது மம்பு மென்றாங்
கரிசில வேந்தி யகன்று நீண்ட கண்மேற்
குரிசிலை யன்று கனற்றி வெந்த காமன்
கருசிலை போற்புரு வத்தாள் காட்சி மிக்காள்.'


அதிசயதி.

'சந்த நீழ லுலாவித் தண்ணென் றமருந் தெண்ணீர்
சிந்து துவலை வீசித் தெண்ணிலாவூ டுலாவு
மந்த வலைய மேன வல்லி தகர வாசந்
தந்த பொழுது வாழ்வார் தமைவைத் தேகு நண்பர்.'

சக்குவரி.

'அருண கிரண மேபோ லங்க ராகங் குலவுந்
தருண கலவி மாரன் றயங்கு சிந்தை யென்னோய்
தெருண முழைய தென்றா லதுவோ சேலாய் கண்ணார்
கருணை சிறிது பெய்யுங் காலை யுண்டே லினிதாம்.'

அதிசக்குவரி.

'தேனுட னாடுஞ் சிலைபொழி மலினச் செயலாட
ஆனுட னாடுங் கவரித ழாயத் தயில்விழியென்
மானுட னாடும் மயிலன சாயன் மதர்விழியார்
வானுட னாடும் மதிதரு துனிநோய் மதியாரோ.'

ஆடி.

'தேனார் பொழுதிற் றிருந்தா தேநீ சிந்தைகொண் டேவே றூரிற்
போனார் தேரூர் சுவடு புதையல் வாழிபொங் கோத மேலை