186

வானூர் மாவுங் கிரியு முதவா வாரல் கொடுவாய் மேவிக்
கானார் சோலைத் தருவிலு லாவுங் காவல் யாவ ருளரே.'

அதியாடி.

'கூரெயிற்றி னேர்தோற்ற முகைவென்று சீர்கொண்டு கொல்லைமுல்லை
நேரிடைக்கு முன்றோற்ற பகைகொண்டு வந்துத னீல மேவுங்
காரளக்கு நாளென்று கடனீந்து வார்சொன்ன கால மன்றாற்
பேரமர்க் கற்றமன மேகுகின்ற வாறென்னை பேதை மாதர்.'

திருதி.

'பாரா வார மருங்கு லாவு மொலியி னோடு பரவைகொண்டே
சாரா வார மளைந்து தங்குந் தொன்னுமர் தெள்ளு புகார்மன்னவர்
வீரா வார மணிந்த வாழி வலவர் மென்பூங் கரும்பினறுங்
காரா வார மருள ராய கவின்பூ மலரொண் சூடாமணி.'

அதிதிருதி.

'ஒருவேனின் றுயிரன்ன தோகையுரை யுள்ளங்கிழித் தூடுபோஞ்
செருவேநின் றசோகதரு வின்செழுந் தாதுதிரப் போதுகொண்டு
பொருவேநின் றான்கொடிய வேனிலான் மதுவுணவுங் கொண்டானன்னோ
வருவேனென் றார்பிரிந்த வஞ்சருரை யிற்கொடிது வானிலாவும்.'

கிருதி.

'கந்தாரம் பாடியாடுங் கரன்மதுக ரமுங்கன்னிகா ரமுஞ்செருந்துங்
கொந்தாருங் குரவமுங் கான்மலிதருங் கோகிலமுந் தாதுகோதுஞ்
சந்தாரங் கோவையார முந்தருணன் தடகடஞ்சா ரனங்கெள்ளிப்பார்
வந்தார்தந் தேர்மிசையால் வரவுதனை யறிகுதிவண் டோகையன்னாய்.'

*பிரகிருதி.

'தளையவி ருட்புது நறைவிரி யும்பொழில் தடமலி துறைமாடே
வளைமொழி நித்தில மளநில வைத்தரு மயிலையி லெழுகாரே


* 'கன்னி யிவள்பிறர் பன்னி யெனதிரு

கண்ணின் மணிநிகர் சன்மனு

மன்னு குலமுதல் பின்னை யொருவரு

மண்ணி லுறுதுணை யின்மையா

லின்னல் பெரிதுள தென்ன புரிகுவ

தென்ன வறிகில னன்னைகேண்

முன்னை மனைநிகழ் தன்ம முனிவனை

முன்னின் மனமிடர் துன்னுமால்.'

(வி-பா-ஆ-ப-வேத்திரகீயச் சருக்கம், 44.)

'இப்பாரதச் செய்யுள் பிரகிருதிச் சந்தத்திற்கு இனிய ஓசையோடு கூடிய உதாரணமாதல் காண்க.' என்பது பழைய குறிப்பு.