188

'பரிதி'
தொழுவடிய ரிதயமல ரொருபொழுதும் பிரிவரிய துணைவனெனலா
மெழுமிரவி கிரணநிக ரிலகுதுகில் புனைசெய்தரு நிறைவரிடமாங்
குழுவுமறை யவருமுனி வரருமரி பிரமருர கவனுமெவருந்
தொழுதகைய விமையவரு மறமருவு துதிசெய்தொழு துடிதபுரமே.'

'மணியிலகு செறிதளிரொ டலரொளிய நிழலரசி மருவியறவோர்
பிணிவிரவு துயரமொடு பிறவிகெட வுரையருளும் பெரியவருளோன்
றுணியிலகு சுடருடைய வரசரொடு பிரமர்தொழு தலைமையவர்மா
வணியிலகு கமலமல ரனையவெழி லறிவனிணை யடிகடொழுவாம்.'

உற்கிருதி.

இனி விருத்த பேதஞ் சொல்லுதும். முன்பு சொல்லிப் போந்த பத்தியம், கத்தியம் என்பன ஆறு விகற்பம் எனக் கொள்க.

"பத்திய நான்கடிய சாதி விருத்தமது
மற்றவற்று மாத்திரை யானறிப--ஒத்தமைந்த
சாதி விருத்தந் தனைமாத் திரையுடனே
தீதி லெழுத்தாற் றெளி."

"ஆதிநூற் காரியைவை தாளியை யென்றிரண்டாஞ்
சாதிசமம் பாதிச் சமம்வியம--மோதுஞ்
செருத்தகைய பேரமர்க்கட் சிற்றிடையாய் சொன்ன
விருத்தமொரு மூன்றா விளம்பு."

என்றதனால் ஆரியை, வைதாளியை என்று இரண்டாம் சாதி. அவற்றுட் சமம், *பாதிச்சமம், +வியமம் என மூன்றாம் விருத்தம் என்க.

"ஓரடிபோ னான்கு மெழுத்தல கொத்தனவு
மீரடி தம்முளொத் தெய்தனவு--மோரடியு


ஓரடிக்கோரடி மிக விகாரப்பட்டுக் கிடந்தமையானும், பல தேசத்துப் பிரதிகளைக்கொண்டு பரிசோதித்தும் யதார்த்த ரூபம் நிச்சயப்படாமையானும் மூலகிரந்தத்தைப் பார்ப்பதற்குப் புராணகவி யாவரென்பது வெளிப்படாமையானும் அதனை ஒழித்துப் பாரத விருத்தத்தில் ஒன்றை அதற்குப் பதிலாகச் சேர்த்தனன்.

(வி-பா-வாரணாவதச் சருக்கம், 51.)

* வடநூலார் அர்த்தசமம் என்று சொல்லுவர்.

+ விஷமம் என்னும் வடமொழிப்பதம் "வியமம் எனத் திரிந்தது," என்பன பழைய குறிப்பு.