192

வெம்பித் திரிவர் மதியான்
மேவினள் பார்வதி யாவிகா வாயால்.'

எனவும்,

"இசைமிகு மொழியா ரனையே
அசைவுறு மனமொழி மதுமொழியா ரனையே
நசைவுறநீ பேதுறலே
பசையொடு சேருக வாழிய பேதுறலே."

எனவும்,

"அனுபம பண்டித சோழ
மனுவவனா குலமொழி வளவா வருளே
யெனவரு வரதா மிகவே
யனவரத முமுனது தோகை வேறுறுமால்."

எனவும் இவையனைத்தும் முதலடியு மூன்றாமடியும் பன்னிரண்டு மாத்திரையாய், இரண்டாமடியு நான்காமடியும் நந்நான்கு கணமாய் இறுதி குரு வருவது என மாத்திரையாற் கண்டுகொள்க. இவ்வாறன்றிப் பிறவாறு வருவனவும் ஆய்ந்தறிக.

இனி வைதாளியை வருமாறு:-

"ஆறலகு தீமா லடலேற் றிறைமுதன்மூன்
றீறு மிரண்டு மெனுமடிகள் -- வேறுமுத
லீர்மாத் திரையா மிரண்டடை வொத்தநடை
சேர்வதுவை தாளியையாச் செப்பு.'

ஒற்றித்த முதலடியும் மூன்றாமடியும் முன்னாறு மாத்திரையாய்ப் பின்னிடை இலகுவான கணம் ஒன்றும் ஓரிலகுவும் ஒரு குருவும் வருவது; இரட்டித்த அடியான இரண்டாமடியும் நான்காமடியும் முன்னெட்டு மாத்திரையாய்ப் பின்னிடை இலகுவான கணம் ஒன்றும் ஓரிலகுவும் ஒரு குருவும் வருவது; இது வைதாளியைக்கு இலக்கணமாம்.

அவை வருமாறு:-

"கருவே யேறூர்வ னாளிலே
வருவே னென்றே போந்த மன்னவன்
றிருவே றாய்த்தூர வெய்தினார்
மருவா ரெனினென் னின்னு யிர்நிலா."

எனவும்,

"கொன்றைப் புதுவேரி கொண்டிதோ
மன்றற் றண்ணிள வாடை வந்ததால்