200

எனவே அவ்வுறுப்புக்களால் நிரம்பின உடல் குற்றப்பட்டதாயிற்று என்பது. ஆயின், மணிப்பிரவாளத்துக்கும் விரவியலுக்கும் வடவெழுத்துள எனில் அவையிற்றுக்கன்று இவ்விலக்கணம், கீழ்க்கணக்கு முதலாகிய செய்யுட்களுக்கே என்றறிக. அவையிற்றுக்கு வேறே இலக்கணம் உண்டென்பது. அன்றியும், அருணனும் வெள்ளியும் முதலான பெரியோர்க்கும் உறுப்புக் குற்றம் உளவென்பது. 'உறுப்புக் குற்றங் காரணமாக யாப்புக்களைப் பழிக்கப் படாவோ?' எனின், யாப்புக்களின் வேறு சிறப்புடைய பயனுளவாகில் அப்பயனோக்கிக் கொண்டாடப்படும். ஆயினும், குற்றங் குற்றமே என்பது. அவைகள் அன்றுள்ளானொரு குரிசிலைப் புகழ்ந்து செய்யுங் கவியுள் மறந்தேயும் வரப்பெறா எனக் கொள்க. ஆகாமைக்குக் காரணம் யாதெனின், தச்ச நூலில் இப்படிப்பட்ட மனைதனை எடுக்கிற் குடிபுகல் இன்ன நன்மை தரும் இன்ன தீமை தரும் என்று சொல்லும் என்பது. மற்றும் இப்படிப்பட்ட யானை, குதிரை, ஆயுதம் உடையானுக்குப் பொல்லாங்கைத் தரும், நன்மையைத் தரும் என்ற நூலுண்மையான் என்பது. ஆகிற் பகைவராய் உள்ளாரைச் சாவவுங் கெடவும் பாடல் ஆகாதோவெனின், அற்றன்று. பாடின கவி பாட்டுண்டான் கொள்ளின் அல்லது பயன் கொடாது என்பது. என் போலவோ எனின், குதிரை இலக்கணமறிவான் குதிரை கொள்ளுமிடத்து இக்குதிரை கொள்ளில் எனக்குப் பொல்லாதென்று தவிரும். மற்றும் இவ்வியானை கொள்ளிற் பொல்லாது; இவ்வீட்டில் இருக்கிற் பொல்லாது என்னும் இலக்கணம் அறியான் பயன் கொள்ளான். பாட்டுண்பானும் இலக்கணந் தான் அறிதலின்றேற் பிறரையிட்டாராய்தல் செய்து கைக்கொள்ளும். அறியாதும் ஆராயாதுங் கொள்ளின், பயன் கொடாதென்பது. அற்றன்று; ஆராயாது கைக்கொண்டாருஞ் சாவவுங் கெடவும் பழையோர் பாடினாரெனின், அது பாட்டின் பயனால் வந்ததன்று. அவர்கள் சொற்பழுதாகாமையில் எனக் கொள்க. 

(3)

146. இப்படிப்பட்ட பொருள் சிறப்புயிராம் என்பது

ஆக்குதல் கேட்டவர்க் கின்பத் தினையன்றி யவ்வவரே
போக்குதல் செய்த கருத்திற் பொருளாய்ப் புராதனரால்
நீக்குதல் செய்தகுற் றத்தைக் கடத்தல் நெறிமுறையே
தாக்குதல் செய்த பொருள்காண் சிறப்புயிர் தாழ்குழலே!

(இ-ள்.) இப்படிப்பட்ட பொருள் சிறப்புயிராவது (எ-று.)