201

உயிருக்குச் சிறப்பாவது, வலியுடைமை. வலியில்லானை ஆவி இல்லாதான் என்பரெனக் கொள்க. 'சொற்குற்றத்தாற் பாட்டுண்ட தலைமகன் உடலுக்கு ஊனம்; பொருட்குற்றத்தால் உயிர்க்கு ஊனம்' என்பதனாற் பொருட்குற்றந் தவிர்தல் சிறப்புடைத்தென்பது. குண்டலகேசியும் உதையணன் கதையும் முதலாக உடையவற்றில் தெரியாத சொல்லும் பொருளும் வந்தன எனின், அகலக்கவி செய்வானுக்கு அப்படியல்லதாகாதென்பது. அன்றியும், அவை செய்த காலத்து அச்சொற்களும் பொருள்களும் விளங்கி இருக்கும் என்றாலும் அமையுமெனக் கொள்க.

(4)

147. இப்படிப்பட்ட பொருள் சிறப்பில்லாத உயிராம் என்பது

தெரிவா னரிது பொருளெனப் போதல் சிதைவுசொல்லப்
புரிவான் பொருளுக்கு மேறுதன் மற்றும் பொருளுண்டென்று
பரிவா னுடன்சொல்ல வேண்டுத லென்றிந்தப் பாட்டில்வைத்த
விரிவாம் பொருளென்னு மாவியின் குற்றம் விளங்கிழையே !

(இ-ள்.) பொருள் தெரியாது எனப்படுதல், குற்றஞ்சொல்லக் கருதினான் சொன்ன பொருளுக்கும் ஏறியிருத்தல், ஒருவர் இப்பாட்டின் பொருண்மேல் எதிர்த்தால் அஃது கைக்கொளப்படாதொழிதல் என இவை முதன் மற்றும் இப்படிப்பட்ட எல்லாம் உயிர்க் குற்றமாம் (எ-று.)

இனிச் சொல்லே உடலாகப் பொருளே உயிராக நின்ற செய்யுளின் நிறமென்று சொல்லப்பட்ட வண்ணம், முன்னை யாப்புக்களிலே சொல்லப்பட்டதெனக் கொள்க. இனி, நடையாவது, தளர்நடையும், இன்னிய நடையும் எனவிரண்டு; தளர்நடையாவது, தண்டக நடை; இன்னிய நடையாவது, பிற செய்யுளின் நடை எனக் கொள்க.

(5)

148. விதர்ப்பர், கௌடர் என்பார் கூறும் ஆவிகள்

ஈண்டுஞ் சிலீட்ட முதாரதை காந்தி புலன்சமதை
தூண்டுஞ் சமாதி பொருட்டெளி வோகஞ் சுகுமாரதை
ஈண்டுமின் பத்தொடு பத்தாவி யென்னும் விதர்ப்பன்; கௌடன்
வேண்டு மிவற்றை விபரீத மாக விளங்கிழையே!

(இ-ள்.) சிலீட்டமும், உதாரதையும், காந்தியும், புலனும், சமதையும், சமாதியும், பொருட்டெளிவும், ஓகமும், சுகுமாரதையும், இன்பமும் என ஆவி பத்தென்று விதர்ப்பக் கவிகள் வேண்டுவர்;