204

இது தொகை மிக்கு வந்தமையால், ஓகம் என்னும் உயிர் ஆயிற்று. தொகை மிகையால் ஓகமென்பர், அது எண்ணில் வந்த சொற்களை ஒன்றாகத் தொகுத்தலின்.

"வேரிக் கமழ்தா ரரசன் விடுகின்ற போதுஞ்
சோரிக் கலத்தின் வகையாற் கொலைசூழ்ந்த போதும்
பூரித்தல் வாட லிவற்றாற் பொலியாது விட்டான்
பாரித்த வெல்லாம் வினையின் பயனென்ன வல்லான்."

இது நான்கடியும் எழுத்தொத்து வந்தமையாற் சமதை என்னும் உயிராயிற்று.

"கடுங்கை வயலுழவர் காலைத் தடிய
மடங்கி யரியுண்ட நீலந்-தடஞ்சோர
நீளரிமேற் கண்படுக்கு நீணீ ரவந்தியார்
கோளரியே றிவ்விருந்த கோ."

என்றதனுட் கண்ணுடையவற்றின் பக்கலுள்ள உறங்குதல் தொழிலைக் கண்ணில்லாத குவளையின்கண்ணும் உலகிற்கொக்கப் புணர்த்தமையாற் சமாதி என்னும் உயிராயிற்று.

"யானையால் யானையு மேவுவான் யானை
வினையான் வினைமையு மாம்."

இது வல்லெழுத்து நீங்கலாய் மெல்லிதாகிய ஓசையொடு வந்தமையாற் சுகுமாரதை என்னும் உயிராயிற்று. இதனை இழை எனவும் அமையும்.

"மானே யுனது வளர்கொங்கை வீக்கத்தைத்
தானேது மெண்ணாது தாமரையோன் - மீனேயும்
வானத்தை யித்தனையு மந்தமா கப்படைத்தான்
ஞானத்தை யில்லான்போ னன்கு."

இஃது உலகு இறந்த நன்பொருட்பொலிவு வரவு புகட்சியின்கண் வந்தமையால், காந்தி என்னும் உயிராயிற்று, 'வரை தோள்,' 'தாமரை புரை தொடை' என்றித்தொடக்கத்தன எல்லாங் காந்தியாம் எனக்கொள்க. இச்செய்யுள் தண்டியார் இலக்கியப்படி பொருளெனக் கொள்க.

இனி உதாரதையாவது, தலையென்றும், இடையென்றும், கடையென்றும் முத்திறமாகச் சொல்லப்பட்ட வள்ளல்களுள் தலையாகு வள்ளல் கொடையினைப் புகழ்ந்து செய்வது.