208

இது காமக்குணத்தின் தன்மையைச் சொன்னமையால், குணத்தன்மை என்னும் அலங்காரமாயிற்று.

"மனத்தின் வாய்மையிற் றொழிலின் வருமெனக்
குணத்தினைக் கிளப்பது குணத்தின் றன்மை."

எனக் கொள்க.

இனி, உவமையென்னும் அலங்காரமாமாறு:

1கடலன்ன காம முழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்."

இஃது உவமையான கடலுக்கும் உவமிக்கப்பட்ட பொருளாயுள்ள காமத்துக்குங் 'கரையேறவொண்ணாமை' என்னும் பண்பு பொதுவாய் நிற்றலால், உவமை என்னும் அலங்காரமாயிற்று.

"உவமா னத்தோ டுவமே யத்தினுக்
குரியபண் புறுத்துவ துவமை யாகும்."

எனக் கொள்க.

இனி, உருவகம் ஆவது,

2"பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா
ரிறைவ னடிசேரா தார்."

இது பிறவிக்கும் கடலுக்கும் நீந்துதற்கு அருமை என்னும் பண்பு பொதுவாகிப் பின்னை உவமிக்கப்பட்ட பொருளையே உவமையாகச் சொன்னமையால், உருவகம் ஆயிற்று. 'போலும்' என முன்னுவமைப் பண்பு எய்திப் பின் 'ஆவது அது' என்று தானே அதுவாகச் சொல்லுதல் உருவகமாம்.

"உவமை போலப் பண்பொடு மிசைந்து
தானே யதுவாவ துருவக மாகும்."

எனக் கொள்க.

இனி, விளக்கு என்னும் அலங்காரமாவது,

3துறந்தார்க்குந் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு
மில்வாழ்வா னென்பான் றுணை."

இதனுள் 'துணை' என்னும் இறுதிச் சொல் மூன்றிடத்தும் பொருள் கொள்ள நின்றமையால், இறுதி விளக்கு ஆயிற்று.


1. திருக்குறள், 1137.

2 திருக்குறள், 10.

3. திருக்குறள், 42.