210

153. பிறபொருள் வைப்பு, தடைமொழி, விதிரேகம், விபாவனை,
சுருக்கு, பெருக்கு, ஈறு நோக்கு, ஏது, நுணுக்கம், இலேசு
என்னும் அலங்காரங்கள் ஆமாறு

கூறும் பிறபொருள் வைப்புத் தடைமொழி கொள்பொருளில்
ஏறு மிரண்டிலொன் றேறும் விதிரேக மேதுவின்மை
தேறும் விபாவனை யன்றித் திகழ்சுருக் கேபெருக்கே
ஈறு மிகுநோக்க மேது நுணுக்க மிலேசு மென்னே.

(இ-ள்.) பிறபொருள் வைப்பும், தடைமொழியும் பெயரினால் இலக்கணமறிக. 'தடைமொழி' எனினும் 'உட்கோள்' எனினும் ஒக்கும். இரண்டு பொருளை ஒக்கச் சொல்லி ஒன்றிற்கு ஒரு குணம் ஏற உண்டாக்குதல், இரண்டுக்கும் வெவ்வேறே இரண்டு குணம் ஏற உண்டாக்குதல் விதிரேகம் என்னும் அலங்காரமாம்; இதனை வேற்றுமை நிலை என்பாருமுளர். யாதானுமாக ஒன்று வந்த காரணம் இன்றியே நிகழ்வதெனின், அது விபாவனையாம்; இதனை வெளிப்பாட்டு நிலை என்பாருமுளர். இனிச் சுருக்கும், பெருக்கும், ஈறு நோக்கும், ஏதுவும், நுணுக்கமும், இலேசும் என்பன சில அலங்காரமுள (எ-று.)

சுருக்கம் பெருக்கங்களைத் தொகை மொழி, மிகை மொழி என்பாருமுளர்.

வரலாறு:-

"மன்னன் றசரதற்கு வாய்த்த மருமகளாய்
மன்னன் சனகன் மகளாகி--மன்னனிரா
மன்றார மாகியபொன் மாதகன்றாண் மீண்டெய்தாள்
என்றாலார் துன்புறா ரீங்கு."

என இதனுள், 'என்றால் ஆர் துன்புறா ரீங்கு' என்று முன்பிற் பொருள்களுக்கேற்பப் பிறிதொரு பொருள் வைத்தமையால் , பிற பொருள் வைப்பாயிற்று. இதனை அருத்தாந்த நியாயம் என்பர் தண்டியார்.

"துறையினிற் பிறக்கப் பொருள்கள் கடியப்
பிறபொருள் வைப்பது பிறபொருள் வைப்பே."

எனக் கொள்க.

1"செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை."


1. திருக்குறள், 1151.