211

இது விலக்குதலையுட் கொண்டு சொன்னமையால் தடைமொழியாயிற்று. தண்டியார் இதனை ஆக்கேபம் என்பர்.

"இழுக்குரை தழீஇ விலக்குதற் பொருளை
முற்கொண் டுரைக்கு முரையே தடைமொழி."

"புணர்ந்தகன்றார் பொன்னிறம் பூத்தற்குத் தந்து
துணர்ந்தகன்ற கொன்றையே சொல்லா--யுணர்ந்தொருவர்
வாட்டா நெடுஞ்சுட ரேந்து மலர்த்தோன்றி
காட்டாவோ காதலர்க்குக் கார்?"

இதனுட்பொன்னிறம் பூத்தற்குப் புணர்ந்தகன்றாரையும், பயனாகிய பொன்னிறம் பெய்தலையும் விளக்கினமையால் விபாவனையாயிற்று. இதனை வெளிப்படை எனினும் இழுக்காது.

"முயற்சி யின்றி முடியும் பொருண்மாட்டு
வியப்புற வருமெனின் விபாவனை யாமே."

எனக் கொள்க.

"வேட்டொழிவ தல்லால் விளைஞர் விளைவயலுட்
டோட்ட கடைஞர் சுடுநந்து--மோட்டாமை
வன்புறத்து மீதுடைக்கும் வச்சத் திளங்கோவை
யின்புறுத்த வல்லாமோ யாம்?"

இதனுட் சிறப்புடையளாகிய தலைமகளை இகழ்ந்து தலைமகன் சிறப்பில்லாத பரத்தையர் மாட்டு நிகழாநின்றமையில் நாட்டுக் கடைஞர் உள்ளார் சிறப்பில்லாத நந்தை யூன்றுப்புடைய ஆமையின் புறத்து உடைத்துத் தின்பர் என்னுமிதனாற்றொகுத்து விளங்கச் சொன்னமையால், தொகைமொழியாயிற்று. வச்சத்தொள்ளாயிரம் முழுவதுந் தொகைமொழி எனக் கொள்க. தொகைமொழி எனினுஞ் சுருக்கம் எனினும் ஒக்கும். இதனைத் தண்டியார் சமாசம் என்பர்.

"நெஞ்சினிற் பொருளை நிரப்ப வேறொரு
செஞ்சொலிற் காட்டுந் திறமே தொகைமொழி."

இனிப் பெருக்காவது, உலகத்தார்க்கேற்றிரா வண்ண மிகச் சொல்லுதல் எனக் கொள்க.

"பேணு குமுத மலரப் பெரும்பகலே
வாணிலவ தாகி மலியுமே--பூண்முலையார்
பண்களகத் தோதாப் பரந்தெழுந்து மாளிகைமேல்
வெண்களபத் தாலே விரிந்து."