222

"பொருத்த மின்மைப் பொருவையும் பொருளையு
மிருத்தியு மிசைவ திசையுவமை யாகும்."

எனக் கொள்க.

"பங்கய மன்று முகமேயிது விவையும்
வண்டல்ல வாட்கண்க ளே."

இஃது உண்மை யுவமை.

"பொருளையுஞ் சினையையும் பொருவன் றென்னு
முரையினிற் கோட லுண்மை யுவமை."

எனக் கொள்க.

1"அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொன் மாலுமென் னெஞ்சு."

இஃதையப்படுலால், ஐயவுவமை.

"பொய்யறு பொருளையும் பொருவையுங் கருதி
யையப் படுவ தைய வுவமை."

எனக் கொள்க.

"திங்களிற் றோன்றிய நஞ்சேநின் சீர்முகத்து
நின்றெழுந்த வெவ்வுரைக்கு நேர்."

இஃது இகழப்படும் உவமையோடுவமித்தலால், இகழ்ச்சி உவமை.

"இகழப் படுபொரு ளியம்பிய பொருவை
நிகர்க்கு மென்பது நிரம்பிய விகழ்ச்சி."

எனக் கொள்க.

"நின்னொக்கு மன்ன ருளரல்லர் கற்பகந்
தன்னொக்கும் பாதவமு மில்."

இஃது எதிர்ப்பொருளுவமை.

"இதுபொரு ளுவமையின் றிதுபொரு டனிமையி
னிதுவே நன்றெனி னெதிர்ப்பொரு ளுவமை,"

எனக் கொள்க.

"வாட்டடங் கண்ணும் வளைந்த புருவமுந்
தாட்டா மரையிற் றலைசிறப்பி -- னாட்டலா
மின்முகத்தைக் காட்டி விளங்கு நுடங்கிடையாய் !
நின்முகத்திற் கொப்பாகு நேர்."

இது அற்புதவுவமை.


1. திருக்குறள், 1081.