229

இதனால் உவமை அலங்காரத்தைப் பிறவாற்றினால் விரித்து விகற்பிப்பதாவதோர் கூற்றினைச் சொல்லுகின்றான்.

(இ-ள்.) ஒப்பிலுவமையும், இழிவுயர்வுப் புகழ்ச்சியுவமையும், உயர்விழிவுப் புகழ்ச்சியுவமையும், சமவுவமையும், தலைப்பெயன்மரபிற் சார்ந்துவருமுவமையும், கூற்றுவமையும், தொகையுவமையும், விரியுவமையும், உறழ்ந்துவரலுவமையும், ஒருவழியொப்பினொரு பொருண்மொழிதலுவமையும், சினைமுதலொப்புவமையும், ஒப்புமறையுவமையும் என உவமையை இன்னும் பிறவாற்றான் விகற்பிப்பர் (எ-று.)

இப்பெயர்களிற் செய்யுட்சுவை நோக்கிக் கடை குறைந்தனவும் உரையிற்கோடல் என்னுந் தந்திரவுத்தியாற்கொள்க.

ஒப்பிலுவமை வருமாறு:-

"செங்குவளை போலா கருநிறத்த சேயரிக்க
ணங்குவளைக் காரிதழு மாங்கொவ்வா--செங்குவளைத்
தண்மலரே நாறுந் தமனியப்பூங் கோதாய்! நின்
கண்மலரே போலுமுன் கண்."

இது மற்றோருவமை இல்லாமையால், ஒப்பிலுவமையாயிற்று.

1"உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னா ருடைத்து."

இது இழிந்தவுவமையின் உயர்ந்ததனைப் புகழ்ந்தமையால், இழிவுயர்புப்புகழ்ச்சியுவமையாயிற்று.

"மலையொக்கும் யானை."

என்பது உயர்ந்த உவமையை இழிந்ததனோடொப்பித்துப் புகழ்ந்தமையால், உயர்விழிவுப்புகழ்ச்சியாயிற்று.

"தந்தையை யொக்கும் மகன்."

என்பது சமவுவமையாயிற்று.

தலைப்பெயன்மரபிற் சார்ந்து வருமுவமை வருமாறு:-

"தாமருவு கின்றாரிப் பைங்கிளியார் தாமிருந்து
காமருபூந் தாதுதிர்க்குங் காரெருமை--தாமருகே
பொன்னுரைகற் போற்றோன்றுங் பூம்புனனீர் நாடென்பே
ரென்னுரைகற் பார்போ லிருந்து."


1. திருக்குறள், 667.