230

இதனுண் மற்றொன்று தலைப்பெய்யவுவமை உரைத்தமையாற் தலைப்பெயன்மரபிற் சார்ந்து வருமுவமையாயிற்று.

கூற்றுவமை வருமாறு:-

"செங்கோல னெங்கோன் கொடுந்தொழிலாற் றெவ்வேந்தர்
தங்கோ னிகலரியன் றாமெளிய--னெங்கோமா
னெவ்வகைய னேந்திய தொல்குணத்தா லேனோரு
மவ்வகைய ராமிவற்றி னால்."

'பவளவாய்' என்பது தொகையுவமை.

'பவளம் போன்ற செவ்வாய்,' என்பது விரியுவமை.

"அன்ன நடைபயின்றா யாயிழைநீ யன்னமு
நின்னடை யேபயின்று நின்னொக்கு--நின்னை
உழைக்கண்ணார் மான்பிணை யொப்பா ரிதென்ன
மழைக்கண்ணாய் நின்போன்ற மான்."

இஃது உறழ்ந்துவரலுவமை.

"எழிறரு ஞாயிற் றெழில்போ னிறைந்து
பொழிதருவான் றிங்களே போல--முழுவுலகுந்
தன்புகழி னானிறைந்த தார்வேந்தன் சேந்தன்பாட்
டென்புகழ்த லாவ தினி."

இஃது ஒருவழியொப்பின் ஒருபொருண் மொழிதலுவமை. இஃதெல்லாவிடத்தும் எல்லாக்காலத்தும் ஒவ்வாப் பொருளை ஓரிடமாயினும் ஒரு காலமாயினும் பற்றிச் சொல்ல வரும்.

"அன்னமே யென்ன வணிமயிலே யாமென்ன
மன்னு மடமான் பிணையென்ன--மின்னு
மிளவஞ்சி யென்ன வருமேயெங் கோமான்
வளவஞ்சி மன்னன் மகள்."

இதனுள், 'அன்னமேயென்ன அணிமயிலேயென்ன' என்று முதலும் சினையுமே உவமையும் பொருளுமாகப் புணர்ந்தமையான், முதல் சினையொப்புவமை.

"காலம் வரைந்திடுங் கைகோள் வழிச்செறி
மாலு முழங்கி வளர்ந்தொழுகிச்--சாலவும்
பெய்கோவா யென்றும் பெருமய மாவினைத்தான்
கைபோவாய் வாழிநீ கார்."

இஃது ஒப்பு மறைவுவமை.