231

'தேர்ந்து' என்று மிகுத்துச் சொல்லியவதனால், எடுத்துக்காட்டுவமை, பான்மாறுவமை முதலியனவுங்கொள்க.

இனி ஒரு சாரார் வார்த்தை, அந்நியவுவமை, வழிநிலை, உயர்பு, உருவகம், ஒற்றுமைமொழி முதலாயவுள்ளிட்டுப் பலவாகச் சொல்லுவர். அவையெல்லாம் மேலை விகற்பங்களிலே அகப்பட்டடங்கும் என்க.

அவர் சொல்லுமாறு:

"காலமு மிடனும் வாலிதிற் புகழ்வா
ராகிய தடுப்பினது வார்த்தை யாகும்."

என்று வார்த்தைக்கு இலக்கணங் கூறுபர்.

காலமாவது, பொழுதும் பருவமும் எனக்கொள்க.

இடமாவது, பாலை, குறிஞ்சி, நெய்தல், முல்லை, மருதம் என்னும் ஐந்து நிலமுமாம்.

"வேலை மடற்றாழை வெண்டோட் டிடைக்கிடந்து
மாலைத் துயின்ற மணிவண்டு--காலைத்
துளிநறவந் தாதெதிரத் தோன்றிற்றே காமர்த்
தெளிநிற வெங்கதிரோன் றேர்."

இது கால வார்த்தை.

1"மழலைக் கனிவாய் மணிவண்டு வருடி மருங்கு பாராட்ட
வழலைக் கலந்த வரவிந்தத் தமளி சேர்ந்த விளவன்னங்
கழனிச் செந்நெற் கதிரென்னுங் கவரி வீசக் கண்படுக்கும்
பழனக் குவளை நீர்நாட பாவை வார்த்தை பகர்வுற்றான்."

இது இட வார்த்தை

"மதிபோன் மறுவில்லை வண்டா மரைபோற்
புதுவிரி புல்லிதழீண் டில்லை--யிதுவெல்லா
மெய்யுணர்வி னார்தமக்கு மெய்தருமா லொக்குமே
மொய்யிணர்ப்பூங்கோதை முகம்."

"கற்பகம்போ லொக்கும் கணுவில்லைக் காவேரி
மற்புனல்போ லாமொருகால் வற்றாது--நற்புகழ்சேர்
நந்திகை மன்னு புலவோர் நவைதீரக்
கந்தகோன் வந்துதவுங் கை."

இவை யிரண்டும் அந்நியவுவமை நிலை.


1. சூளா. சுயம்வரச் சருக்கம், 195.