234

வரலாறு:-

"தாமரையைக் குவியாது தாட்குமுத மலர்த்தாது
தீமைசெயு என்னுயிர்க்குன் றிருமுகமாந் திங்களே."

இது சந்திரன் தொழிலைத் தெற்றினமையால், தெற்றுருவகம். இதனை விரோத உருவகமெனினும் அமையும்.

"எஞ்சிய பண்பி லியையினு மொழிதொழில்
செஞ்சொலாற் கிளப்பது தெற்றுரு வகமே."

எனக் கொள்க.

1"பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா
ரிறைவ னடிசேரா தார்."

இது பிறவி என்னாநின்ற பெருங்கடல் என்னுஞ் சொற்றொக்கு நின்றமையால், தொகையுருவகம்.

"மிக்க வுவமை விரியா துரையிற்
றொக்கு நிற்பது தொகையுரு வகமே."

எனக் கொள்க.

"காலன் மதத்தாற் சிவந்தகபோ லத்தழகு
கோலிக் குனித்த புருவக் கொடியிடையாய் !
சீலமலிநின் முகமென்னுந் திங்களா
னாலுலகுங் காம னலியக் கெடுக்கலுற்றான்."

இது ஒவ்வாக் கிரியையைக் கூறினமையால், அவ்வியவுருவகம்.

"கூறிய பொருள்வயிற் கொளுத்திய கிரியை
வேறா யிருப்பதவ் வியவுரு வகமே."

எனக் கொள்க.

"ஆழ முடைமையினா லாழியா மந்தரத்து
வாழ நிமிர்தலான் மந்தரமா--மேழுலகுந்
தந்தளிக்கும் வண்ணத்தாற் றாயாஞ்செந் தாமரைக்கட்
பைந்தெரியன் மாயோன் பதி."

இது ஏது காட்டி உருவகஞ் சொன்னமையால், ஏதுருவகம்.

"மரபுடைப் பொருளைமற் றதுவா லதுவெனு
முரைபெறி லேதுரு வகமா மென்ப."

எனக் கொள்க.


1. திருக்குறள், 10.