240

பொருள் வைப்பும், இயைபுப் பிறபொருள் வைப்பும், இயைபிலிப்பிறபொருள் வைப்பும், விரவியற் பிறபொருள் வைப்பும் என விகற்பித்தார் தண்டியார் (எ-று.)

வரலாறு;--

"விண்ணவரின் மிக்கு விளங்கொளியான் மேம்பட்டு
மண்ணவர்க்குக் கண்ணாய வான்கதிர்கள்--கண்ணெதிரே
பந்தித் திருளடையும் பாரிலென்றா லானவினைப்
பந்தத்தை யாவர்கடப் பார்".

இது எல்லார்க்கும் பொதுவாதலால், பொதுப் பிற பொருள் வைப்பு.

"எண்ணும் பயன்றூக்கா தியார்க்கும் வரையாது
மண்ணுலகில் வாம னருள்வளர்க்குந்-- தண்ணறுந்தேன்
பூத்தளிக்குந் தாராய் ! புகழாளர்க் கெவ்வுயிருங்
காத்தளிக்கை யன்றோ கடன்",

இது பொதுவின்றிப் புகழாளரையே குறித்தமையால், சிறப்பு நிலைப்பிற பொருள் வைப்பு.

"எற்றே கொடிமுல்லை தன்னை வளர்த்தெடுத்த
முற்றிழையாள் பாட முறுவலிக்கு-- முற்ற
முடியப் பரவை முழங்குலகத் தென்றுங்
கொடியர்க்கு முண்டோ குணம்".

இது சிலேடைப் பொருண்மேல் வந்தமையால், சிலேடைப் பிற பொருள்
வைப்பு.

"காதன் மதியங் களங்கமுடைத் தானாலும்
பூதலத்தை யெல்லாம் பொலிவிக்கு--மோதுசில
குற்ற முடையா ரெனினுங் குவலயத்து
நற்றகையார் நல்லரென்றே நாடு."

"வெய்ய குரற்றோன்றி வெஞ்சினவே றுட்கொளினும்
பெய்யு மழைமுகிலைப் பேணுவரால்-- வையத்
திருள்பொழியுங் குற்றமிருப்பினும் யார்க்கும்
பொருள்பொழிவார் மேற்றே புகழ்".

இவை தெற்றுங் குணமுடையவாதலால், முரண் பிற பொருள் வைப்பு.

"அத்தகு திங்கண் முகமய மானாலு
மெத்தனையும் வான்றுயர மெய்துவிக்கு--மொய்த்தவர்க்