245

'செய்த தவமில்லைத் தேடிய மாடில்லை
யெய்திய நூலொ டியைபில்லை--மெய்யன்பு
மேயநண்பர் தாமில்லை மேதினியின் மெல்லவே
போயிற் றிளமை புலர்ந்து.'

இது அனுசயத் தடைமொழி. இதனைக் கையறவு எனினும் அமையும்.

'ஏகுவ னியானென் றெடுத்துரைத்த நீயினிப்
போகிலென் போகாக்கா லென்.'

இது செற்றத் தடைமொழி.

'தேடித் தந்திட மாடிற் போக்குற
நாடித் திசைமிசை யோடுநம் மிறையே,'

இது வெப்பத் தடைமொழி.

'பைங்குழலும் பாரப் பணைமுலையு முண்மையா
லிங்கிவளுக் குண்டோ விடை.'

இது தருமத் தடைமொழி; தருமமாவது ஆதேயம். இவ்விடத்துத் தருமமாய் உண்மைக்கு ஆதாரமாய் நின்ற இடையைத் தடுத்தமையால், தருமத் தடைமொழி.

'செல்க திருவுளமேல் யானறியேன் றேங்கமட
மல்லமது தாங்கு மதர்விழியின்--மெல்லிமை
நோக்கு விலங்குமேல் நோமிவடன் காதலைநீ
போக்கி யகல்வாய் பொருட்கு'.

இது தன் வசமல்லாமையைக் கூறி விலக்கினமையால், பரவசத் தடைமொழி.

'மாதர் துவரிதழ்வாய் மைந்த ருயிர்கவருஞ்
சீத முறுவல் செயலழிக்கு--மீதுலவா
நீண்ட மதர்விழிக ணெஞ்சங் கிழித்துலவும்
யாண்டையதோ மென்மை யிவர்க்கு,'

இது குணத்தை விலக்குதலால், குணத் தடைமொழி.

'அப்போ தடுப்ப தறியே னருள்செய்த
திப்போ திவளு மிசைகின்றாள்--தப்பில்
பொருளோ புகழோ தரப்போவீர் மாலை
யிருளோ நிலவோ வெழும்.'