249

164. விபாவனை,சுருக்கு என்னும் அலங்காரங்கள்

பாவும் விபாவனை பல்லோ ரறியும் பரிசொழித்து
மேவு மியல்பு குறிப்பேது நீக்கி விளைவுரையாம்;
வீவில் கவிதான் கருது பொருளை வெளிப்படுத்தற்
கோவிய மேசுருக் காமறை சொல்லி னுரைத்திடினே.

(இ-ள்.) நிறுத்த முறையானே விபாவனை என்னும் அலங்காரமும் சுருக்கு என்னும் அலங்காரமுங் கூறுகின்றான். விபாவனையாவது, ஒன்றின் விளைவு உரைக்குங்காற் பலரும் அறிய நிகழுங் காரணம் ஒழித்துப் பிறிதொரு காரணங் கற்பிப்பது. அது குறிப்பு விபாவனையும், இயல்பு விபாவனையும், காரணம் விலக்கிக் காரியம் புலப்படுத்தும் விபாவனையும் எனவரும். *சுருக்கு என்னும் அலங்காரம் கவி தன்னாற் கருதப்பட்ட பொருளை மறைத்து அதனை வெளிப்படுத்தற்குத் தக்க பிறிதொன்றினைச் சொல்வது (எ-று.)

'வீவில்' என்று மிகுத்துச் சொல்லியவதனால், அது அடையும் பொருளும் அயல்பட மொழிதலும், அடை பொதுவாக்கிப் பொருள் வேறுபட மொழிதலும், அடை விரவிப் பொருள் வேறுபட மொழிதலும், அடை விபரீதப்பட்டுப் பொருள் வேறுபட மொழிதலும் என்று நாலு வகையான் வரும்.

வரலாறு:--

'தீயின்றி வேந்தமியோர் சிந்தை செழுந்தேறல்
வாயின்றி மஞ்ஞை மகிழ்தூங்கும்--வாயிலா
ரின்றிச் சிலரூட றீர்ந்தா ரிகலின்றிக்
கன்றிச் சிலவளைக்குங் கார்'.

இஃது இயல்பு விபாவனை.

'கடையாமே கூர்த்த கருநெடுங்கண் டேடிப்
படையாமே யேய்ந்ததனம் பாவாய்--கடைஞெமிரக்
கோட்டாமே கோடும் புருவங் குவிகச்சே
றாட்டாமே சேந்த வடி.'

இது குறிப்பு விபாவனை.

'பூட்டாத விற்குனித்துப் பொங்கு முகிலோங்குந்
தீட்டாத வம்பு சிதறுமா--லீட்டமாய்க்


* "இதனைப் பிறர் ஒட்டு எனவும், தொகைமொழி எனவும் மொழிவர்," என்பது பழைய குறிப்பு.