251

இது வறுமையுற்றான் ஓர் வள்ளலைக் கொள்ள நின்று பொருள் வேறுபட்டு அடை விபரீதப்பட வந்தது.

165. அதிசயம், நோக்கு என்னும் அலங்காரங்கள்

அருளு மதிசய மான்றோர் வியப்ப துலகிறவாப்
பொருள்குண மையந் துணிவு திரிவெனப் போற்றுவரால்;
பெருகிய நோக்கது தற்குறிப் பேற்றம் பெயர்பொருளாய்
வருவதும் பேராப் பொருளது மாக வகுத்தனரே.

(இ-ள்.) அதிசயமாவது ஆன்றோர்க்கு வியப்புடைத்தாக வருவது; அது உலகநடை இறவாது பொருளதிசயமும், குணவதிசயமும், ஐயவதிசயமும், துணிவதிசயமும், திரிவதிசயமும் என்னுங் கூறுபாட்டால் வரும். நோக்கு என்னும்
அலங்காரந் *தற்குறிப்பேற்றமாம்; அஃது இயங்கு பொருளும் இயங்காப் பொருளும் என வரும் (எ-று.)

அதிசயமெனினும், பெருக்கு எனினும், மிகைமொழியெனினும் ஒக்கும்.

வரலாறு:-

'பண்டு புரமெரித்த தீயே படர்ந்தின்று
மண்ட முகடு நெருப்பறா--தொண்டளிர்க்கை
வல்லி தழுவக் குழைந்த வடமேரு
வில்லி நுதன்மேல் விழி'.

இது பொருளதிசயம்.

'மாலை நிலவொளிப்ப மாத ரிழைபுனைந்த
நீல மணிக ணிழலுமிழ--மேல்விரும்பிச்
செல்லு மிவள்குறித்த செல்வன்பாற் சேர்தற்கு
வல்லிருளா கின்ற மறுகு.'

இது குணவதிசயம்.

'உள்ளம் புகுந்தே யுலாவு மொருகாலென்
னுள்ள முழுது முடன்பருகு--மொள்ளிழைநின்
கள்ளம் பெருகும் விழிபெரிய வோகவல்வே
னுள்ளம் பெரிதோ வுரை.'


*"தற்குறிப்பேற்றமாவது, ஒரு பொருள் உலகினிடத்தே இயல்பாக நிகழுந் தன்மையை ஒழித்துக் கவி செய்வான், தான் கருதிய வேறொரு காரணத்தினை அதின்கண்ஏற்றி மொழிவது,"என்பது பழைய குறிப்பு.