254

இஃது இன்மை அபாவம்.

'விரிந்த மதிநிலவின் மேம்பாடும் வேட்கை
புரிந்த சிலைமதவேள் போரும்--பிரிந்தோர்
நிறைதளர்வு மொக்க நிகழ்ந்தனவா லாவி
பொறைதளரும் புன்மாலைப் போது.'

இஃது ஒருங்குடன் தோற்றம்.

'பொன்னி வளநாடன் கைவேல் பொழிநிலவால்
முன்ன ரசைந்து முகுளிக்குந்--தன்னேர்
பொரவந்த வேந்தர் புனைகடகச் செங்கை
யரவிந்த நூறா யிரம்.'

இஃது யுத்தம்.

'இகன்மதமால் யானை யிணைவரா வெங்கோன்
முகமதியின் மூர னிலவா--னகமலர்வ
செங்கயற்க ணல்லார் திருமருவு வாள்வதன
பங்கயங்கள் சாலப் பல.'

இஃது அயுத்தம். பிறவும் அன்ன.

167. நுணுக்கம், இலேசம் என்னும் அலங்காரங்கள்

திகழு நுணுக்கங் குறிப்பிற் றொழிலிற் றிறமுணர்த்தல் ;
நிகழு மிலேசமெய்ச் சத்துவம் வேறு நெறியினுய்த்தல் ;
இகழு மொழியிற் புகழ்தலு மேத்திய வின்னுரையிற்
புகழு நடையிற் பழித்தலும் போற்றுவர் பொற்றொடியே !

(இ-ள்.) நுணுக்கம் என்னும் அலங்காரம் காரியங்களை மரபாற் சொல்லாதேயுணர்த்தல்; அது குறிப்பு நுணுக்கம், தொழில்நுணுக்கம் என இரண்டு வகையாம்; இலேசம் என்னும் அலங்காரம் கண்ணின் நீர் வார்தல், மெய் சிலிர்த்தல் முதலான * சத்துவங்கட்கு வேறு காரணஞ் சொல்வது; இகழ்வது போலப் புகழ்தலும் புகழ்வதுபோலிகழ்வதும் இதன்பாற்படுமென்று கூறுவாருமுளர் (எ-று.)


* 'சத்துவமாவது வெள்ளிய பளிங்கில் வர்ணநூல் கோத்தால் அந்நூலின் வர்ணம் புறம்பொழிந்து தோன்றுமாறு போல உவகை முதலிய உள்ள நிகழ்ச்சி வெளிப்படத் தோன்றுங் குறியாம்' என்பது பழைய குறிப்பு.