255

வரலாறு:-

'காதலன் மெல்லுயிர்க்குக் காவல் புரிந்ததாற்
பேதைய ராயம் பிரியாத -- மாதர்
படரிருள்கால் சீய்க்கும் பகலவனை நோக்கிக்
குடதிசையை நோக்குங் குறிப்பு.'

இது குறிப்பினாலே இரவுக்குறி நேர்ந்தமையால், குறிப்பு நுணுக்கம்.

'பாடல் பயிலும் பணிமொழி தன்பணைத்தோட்
கூட லவாரைவாற் குறிப்புணரத்து--மாடவற்கு
மென்றீந் தொடையாழின் மெல்லவிர றைவந்தா
ளின்றீங் குறிஞ்சி யிசை.'

இஃது இடையாமத்தை அக்காலத்திற்குரிய குறிஞ்சி இசையைப் பாடிக் குறித்தலால், தொழில் நுணுக்கம்.

'கல்லுயர்தோட் கிள்ளி பரிதொழுது கண்பனிசோர்
மெல்லியலார் தோழியர்முன் வேறொன்று--சொல்லுவராற்
பொங்கும் படைபரப்பி மீதெழுந்த பூந்துகள்சேர்ந்
தெங்கண் கலுழ்ந்தனவா லென்று. '

'மதுப்பொழிதார் மன்னவனை மால்கரிமேற் கண்டு
விதிர்ப்ப மயிரரும்ப மெய்யிற்--புதைத்தாள்
வளவா ரணநெடுங்கை வண்டிவலை வாய்ந்த
விளவாடை கூர்ந்த தென.'

இவை கண்ணீரரும்பல், மெய்ம்மயிர் சிலிர்த்தல் என்னும் சத்துவங்களை வேறு நெறியிற் புணர்த்தலால், இலேசமாம்.

'ஆடன் மயிலியலி யன்ப னணியாகங்
கூடுங்கான் மெல்லென் குறிப்பறியா-னூட
லிளிவந்த செய்கை யிரவாளன் யாண்டும்
விளிவந்த வேட்கை யிலன்.'

'மன்னிய பெண்ணை வதைசெய்த வாள்வலியுங்
கன்னியை யெய்திக் கலந்ததுவும்--பொன்னிக்
குலமங்கை தன்னைக் கொலைசெய் ததுவு
மலர்மங்கை கோற்கோர் வடு.'

இவை புகழாப் புகழ்ச்சி இலேசம்.

'மேய கலவி விளைபோழ்து மெல்லியநஞ்
சாய றளராமற் றாங்குமாற்--சேயிழையாய்