260

' நிலனும் விசும்பா நிமிர்புனலாந் தீயா
மலர்கதிராம் வான்மதியா மன்றி-யலர்கொன்றை
யொண்ணறுந் தாரா னொருவ னுயிர்க்குயிரா
யெண்ணிறந்த வெப்பொருளு மம்.'

இது பொருளிடத்து வந்தமையால், பொருளவனுதி.

' மனுப்புவிமேல் வாழ மறைவளர்க்கு மாரப்
பனித்தொடையற் பார்த்திபர்கோ னெங்கோன்-றனிக்கவிகை
தண்மை நிழற்றன்று தற்றெழுத பேதையர்க்கு
வெம்மை நிழற்றாய் மிகும்.'

இது குணத்தினிடத்து வந்தமையாற் குணவவனுதி.

'சிறப்பினுங் குணத்தினுந் திருவினுஞ் சீர்மையை
மறுத்துடன் மொழிவ தவனுதி வழக்கே'

இது பிறவலங்காரங்களோடு கூடியும் வரும் .

'நறவேந்து கோதை நலங்கவர்ந்து நல்கா
மறவேந்தன் வஞ்சியா னல்லன்-றுறையின்
விலங்காமை நின்று வியன்றமிழ்நா டைந்தின்
குலங்காவல் கொண்டொழுகுங் கோ.'

இது சிலேடைப் பொருள்மேல் வந்தமையால், சிலேடை அவனுதி. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.

(26)

170. சிலேடை என்னும் அலங்காரம்

செப்புஞ் சிலேடை யொருதிறஞ் சேர்சொற் பலபொருளை
ஒப்ப வுணர்த்தல்; ஒருவினை பல்வினை யோங்குமுரண்
துப்புறழ் வாயின் சொலாய்!நிய மத்தோ டநியமமுந் 
தப்பில் விரோதத் துடனவி ரோதமுஞ் சாற்றினரே.

(இ-ள்.) சிலேடையென்னும் அலங்காரம் ஒருவகையாக நின்றசொற் பலபொருள் தெரிய நிற்பது; அது ஒருவினைச் சிலேடையும், பலவினைச் சிலேடையும், முரண் சிலேடையும், நியமச் சிலேடையும், அநியமச் சிலேடையும், விரோதச் சிலேடையும், அவிரோதச் சிலேடையும் என வரும் (எ-று.)

வரலாறு:-

'அம்பொற் பனணமுகத்துத் திண்கோட் டணிநாகம்
    வம்புற்ற வோடை மலர்ந்திலங்க-வும்பர்