261

நவம்புரியு நாண்மதியுங் கங்கையு நண்ணித்
தவம்புரிவார்க் கின்பந் தரும்.'

இது ஒரு வினையிலே சிலேடித்தமையினால், ஒரு வினைச்சிலேடை.

' தவிர்வில் மதுவுண் களிதளிர்ப்ப நீண்டு
செவிமருவிச் செந்நீர்மை தாங்கிக்--குயிலிசையு
மின்னுயிரா நுண்ணிடையார் மென்னோக்கு மேவலா
ரின்னுயிரை யீர்கின் றன.'

இது பல வினை கொண்டு நிற்றலால், பலவினைச் சிலேடை.

' ஒருவினை முடித்தலும் பலவினை முடித்தலு
மொருவினை பலவினைச் சிலேடை யாகும்.'

'மாலை மருவி மதிதிரிய மாமணஞ்செய்
காலைத் துணைமேவ லார்கடிய--வேலைமேன்
மிக்கார் கலியடங்கா தார்க்கும் வியன்பொழில்கள்
புக்கார் கலியடங்கும் புள்.'

இது முரணத் தொடுத்தமையால், முரண் வினைச் சிலேடை.

'முரண வருவது முரண்வினைச் சிலேடை.'

'வெண்ணீர்மை தாங்குவன முத்தே வெறியவாய்க்
கண்ணீர்மை சோர்வ கடிபொழிலே--பண்ணீர்மை
மென்கோ லியாழே யிரங்குவன வேல்வேந்தே
நின்கோ னிலவு நிலத்து.'

இது சிலேடித்தவற்றை நியமித்துச் சொன்னமையால், நியமச்சிலேடை. இன்னும் இதனை இருபொருள்
நியமச்சிலேடை, முப்பொருள் நியமச்சிலேடை எனப் பல விகற்பங்களாலும் உரைப்பாரும் உளர். அவை
வந்தவழிக் கண்டுகொள்க.

'சிறைபயில்வ புட்குலமோ தீம்புனலு மன்ன
விறைவநீ காத்தளிக்கு மெல்லை--முறையிற்
கொடியன மாளிகையின் குன்றமே யன்றிக்
கடியவிழ்பூங் காவு முள.'

இது சிலேடித்த பொருள் நியமஞ் செய்யாதே மற்றும் ஒரு பொருள் சொல்லுதலால், நியமச் சிலேடை.

'விச்சா தரனேனு மந்தரத்து மேவானா
லச்சுத னாயினுமம் மாயனலன்--நிச்ச