262

நிறைவான் கலையா னகளங்க னீதி
யிறையா னநகனெங் கோன்.'

இது சிலேடித்தவற்றைப் பின்னரும் விரோதிப்பச் சிலேடித்தமையால் விரோதச் சிலேடை.

'சோதி யிரவி கரத்தா னிரவொழிக்கு
மாதிடத்தான் மன்மதனை மாறழிக்கு--மீதா
மநகமதி தோற்றிக் குமுத மளிக்குந்
தநத னிருநிதிக்கோன் றான்.'

இது முன்னர்ச் சிலேடித்த பொருளைப் பின்னரும் விரோதியாமற் சிலேடித்தமையால், அவிரோதச் சிலேடை. இவ்வனைத்துச் சிலேடையுஞ் செம்மொழிச் சிலேடையும் பிரிமொழிச் சிலேடையும் என இரண்டு கூறுபடும் எனக் கொள்க.

வரலாறு:--

'செங்கரங்க ளாலிரவு நீக்குந் திறம்புரிந்து
பங்கய மாதர் நலம்பயிலப்--பொங்குதயத்
தோராழி வெய்யோ னுயர்ந்த நெறியொழுகு
நீராழி நீணிலத்து மேல்.'

இது ஒரு வழி நின்ற சொல் வேறுபடாது பல பொருள் தந்தமையால், செம்மொழிச் சிலேடை.

'தள்ளா விடத்தேர் தடந்தா மரையடைய
வெள்ளா வரிமா னிடர்மிகுப்ப--வுள்வாழ்தேஞ்
சிந்துந் தகைமைத்தே யெங்கோன் றிருவுள்ள
நந்துந் தொழில்புரிந்தார் நாடு'.

இது ஒரு வழி நின்ற சொல் பிரிந்து தொகை வேறுபட்டுப் பல பொருள் கொண்டமையால், பிரிமொழிச் சிலேடை.

171. சிறப்பு, உடனிலை, முரண் என்னும் அலங்காரங்கள்

செல்லுஞ் சிறப்புத் தொழில்குண மங்கஞ் சிதைந்திடினு
நல்ல பயன்பட நாட்டல்; உடனிலைச் சொன்னயந்து
சொல்லுங் குணமுத லொத்த தொகுத்தல்; சொலும்பொருளும்
புல்லும் விரோதம் புணரின் முரணென்ப பொற்றொடியே!

(இ-ள்.) சிறப்பென்னும் அலங்காரம், குறையுடனே மேம்பாடு தோன்றச் சொல்லுவது; அது குணக்குறை விசேடமும், தொழிற்குறை விசேடமும், சாதிக்குறை விசேடமும், பொருட்குறை விசேடமும், உறுப்புக்குறை விசேடமும் என விகற்பிக்கப்படும்.