263

உடனிலைச்சொல் என்னும் அலங்காரம் பொருள்கள் தம்மில் ஒப்பாயினவற்றை ஒருங்கு கூட்டிச் சொல்லுதலாம். அது புகழ்தற்கண்ணும், பழித்தற்கண்ணும் வரும். முரண் என்னும் அலங்காரஞ் சொல்லும் பொருளும் மாறுபட வைத்தலாம்
(எ-று.)

சிறப்பெனினும் விசேடமெனினும் ஒக்கும். ஒப்புமைக் கூட்டமெனினும் உடனிலைச்சொல் எனினும் ஒக்கும். முரண் எனினும் விரோதம் எனினும் ஒக்கும்.

வரலாறு:-

'கோட்டந் திருப்புருவங் கொள்ளா வவர்செங்கோல்
கோட்டம் புரிந்த கொடைச்சென்னி--நாட்டஞ்
சிவந்தன வில்லை திருந்தார் கலிங்கஞ்
சிவந்தன செந்தீத் தெற.'

இது குணத்திலே குறைவு கூறிக் காரியத்திலே மேம்பாடு தோன்றச் சொன்னமையால், குணக்குறை விசேடம்.

'ஏங்கா முகில்பொழியா நாளும் புனறேங்கும்
பூங்கா விரிநாடன் போர்மதமா--நீங்கா
வளைபட்ட தாளணிகண் மாறெதிர்ந்த தெவ்வர்
தளைபட்ட தாட்டா மரை.'

இது தொழிற்குறை விசேடம்.

'மேய நிரைபுரந்து வெண்ணெய் தொடுவுண்ட
வாயனார் மாறேற்ற மார்புரிந்தார்--தூய
பெருந்தருவும் பின்னுங் கொடுத்துடைந்தார் விண்மேற்
புரந்தரனும் வானோரும் போல்.'

இது சாதிக்குறை விசேடம்.

'தொல்லை மறைதேர் துணைவன்பா லாண்டுவரை
யெல்லை யிருநாழி நெற்கொண்டோர்--மெல்லியலா
ளோங்குலகில் வாழு முயிரனைத்து மூட்டுமா
லேங்கொலிநீர்க் கச்சி யிடம்.'

இது பொருட்குறை விசேடம்.

'யானை யிரதம் பரியா ளிவையில்லைத்
தானு மனங்கன் றனுக்கரும்பு--தேனார்
மலரைந்தி னால்வென் றடிப்படுத்தான் மார
னுலகங்கண்  மூன்று மொருங்கு.'

இது உறுப்புக்குறை விசேடம்.