264

'பூண்டாங்கு கொங்கை பொரவே குழைபொருப்புந்
தூண்டாத தெய்வச் சுடர்விளக்கு--நாண்டாங்கு
வண்மைசால் சான்ற வருங்காஞ்சி வண்பதியு
முண்மையா லுண்டிவ் வுலகு.'

இது புகழுடனிலை.

1.கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனு
முள்ளது சொல்லாச் சலமொழி மாந்தரு
மில்லிருந் தெல்லை கடப்பாளு மிம்மூவர்
வல்லே மழையருக்குங் கோள்.'

இது பழிப்புடனிலை. பிறவும் அன்ன.

'சோலை பயிலுங் குயின்மழலை சோர்ந்தடங்க
வாலு மயிலினங்க ளார்த்தெழுந்த--ஞாலங்
குளிர்ந்த முகில்கறுத்த கோபஞ் சிவந்த
விளர்ந்த துணைபிரிந்தார் மெய்.'

'காலையு மாலையுங் கைகூப்பிக் காறொழுதால்
மேலை வினையெல்லாங் கீழவாங்--கோலக்
கருமான்றோல் வெண்ணீற்றுச் செம்மேனிப் பைந்தார்ப்
பெருமானைச் சிற்றம் பலத்து.'

இவை முரண்.

2.'மொழியினும் பொருளினு முரணுதல் முரணே.'

இது பிறவலங்காரங்களோடும் வரும்.

'இனமா னிகல வெளியவா மேனும்
வனமேவு புண்டரிகம் வாட்டும்--வனமார்
கரியுருவங் கொண்டு மரிசிதறக் காட்டும்
விரிமலர்மென் கூந்தல் விழி.'

இது சிலேடை முரண்; பிறவும் அன்ன. (31)

172. நுவலாச்சொல், தெரிவில் புகழ்ச்சி, சுட்டு
என்னும் அலங்காரங்கள்

மாறி யிகழ்மொழி வண்புக ழாய்நுவ லாச்சொல்வரும்;
தேறுந் தெரிவில் புகழ்ச்சியொன் றைப்பழிக் கப்பிறிது
கூறிப் புகழுதல்; சுட்டா நிகழ்பயன் கொள்பொருளில்
வேறு படநன்மை தீமை வெளிப்படல் மெல்லணங்கே!


1. திரிகடுகம், 50.

2. தொல்-பொருள், சூ.407.