268

சூத்திரத்தில் 'உவமையுருவகம்' என்றானாயினும், மொழிமாற்றி 'உருவகவுவமை' என்று கொள்க.

'மின்னிருக்கச் சாடி விழுத்துவலை மும்மதமா
முன்னுருமிக் கோசை முழக்காகப்--பெண்ணுருவ
வார்மென் முலையார் மனக்கோட்டை மேல்வருமே
கார்மேக மென்னுங் களிறு.'

இது முற்றுருவகம்.

1 'இரங்கு குயின்முழவா வின்னிசையாழ் தேனா
வரங்க மணிபொழிலா வாடும் போலு மிளவேனி
லரங்க மணிபொழிலா வாடுமாயின்
மரங்கொன் மணந்தகன்றார் நெஞ்சமென் செய்த திளவேனில்.'

இது ஏகதேச உருவகம்.

2'வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை.'

இது வில்லினை ஏராகவுடைய உழவரென்றும், சொல்லினை ஏராகவுடைய உழவரென்றும் உருவகமாக்கி, இருவரையும் பொருட்டெளிவால் உவமித்தலினால் உருவகவுவமை.

'பைத்த லைப்பண நாக மழன்றிட
மொய்த்த லைக்கிளை முன்னிய போரெனக்
கைத்த லத்து முகிழ்த்தது கார்முக
மெத்த லைச்சிலம் பாயர வெய்துமே.'

இது காரண மிகைமொழி. அகாரண மிகைமொழி வந்தவழிக் காண்க.

176. பாட்டுக்களின் வகை

யாப்பை யியம்பிடின் முத்தக மோடு குளகந்தொகை
காப்பிய மாம்;முத் தகந்தன் பொருளோர் கவியின்முற்றும்;
வாய்ப்பிற் குளகம் பலபாட் டொருவினை; மன்னுதொகை
கோப்பிற் பொருளன; காப்பிய மாநூல் கொடியிடையே!

(இ-ள்.) செய்யுள் முத்தகமும், குளகமும், தொகைநிலையும், காப்பியமும் என நால்வகைப்படும்; முத்தகமாவது, ஒரு கவியிலே வினை முடிவது; குளகமாவது, பல கவி ஒரு வினையால் முடிவது.


1. யா.வி. சூ.75, மேற்கோள்.

2. திருக்குறள், 872.