272

1'அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.'

இது நவின்றோர்க்கினிமை.

2'வீணாள் படாமை நன்றாற்றி னஃதொருவன்
வாணாள் வழியடைக்குங் கல்.'

இது உய்த்துணர வைத்தல்.

3.'யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.'

இது வினாதல்.

4'எப்பொரு ளெத்தன்மைத் தாகிலு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு.'

இது விழுமியது பயத்தல்.

5'தீயவை செய்தார் கெடுத னிழறன்னை
வீயா தடியுறைந் தற்று.'

6'அருளிலார்க் கவ்வுலக மில்லைப் பொருளிலார்க்
கிவ்வுலக மில்லா தியாங்கு.'

இவை தர்க்கத்தில் எடுத்துக்காட்டுப் போலி.

7'கடலோடா கால்வ னெடுந்தேர் கடலோடு
நாவாயு மோடா நிலத்து.'

இது காண்டல்.

8'சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்
கலத்துணீர் பெய்திரீஇ யற்று.'

இஃது அனுமானம்.

9'பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா
பிற்பகற் றானே வரும்.'

இது பிறநூன் முடிந்தது தானுடன்படுதல், இனிச் சித்திரக்கவியாமாறு சொல்லுகின்றான்.


1. திருக்குறள், 443.

2. " 38.

3. " 397.

4. திருக்குறள் 356.

5. " 208.

6. " 247.

7. திருக்குறள், 496.

8. " 660.

9. " 319.