281

திறனாவன,

"அராகம் நேர்திறம் வற்புக் குறுங்கலி
யாக நான்கும் பாலையாட் டிறனே
நைவளங் காந்தாரம் பஞ்சுரம் படுமலை
மருளொடு செந்திறங் குறிஞ்சியாட் டிறனே."

"நவிரே வடுகு குறிஞ்சியே திறமென்
றிவைநான் காகு மருதயாட் டிறனே
நேர்திறம் பியாதிறம் யாமயாழ் சாதாரி
யென்றிவை நான்குசெவ் வழியாட் டிறனே."

பாலையாவன, செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கொட்டிப்பாலை, இனப்பாலை, விளரிப்பாலை என வேழும் என்ப.

கூட்டமாவன, எழுவகை யகத்திற் கண்டுகொள்க.

திணையாவன, அகமே, அகப்புறமே, புறமே, புறப்புறமே என நான்கென்ப.

திணையின் பகுதியாவும் பொருளதிகாரத்திற் கண்டுகொள்க.

இருதுவாவன,

"காரே கூதிர் முன்பனி பின்பனி
சீரிள வேனி லொடுமுது வேனில்."

எனவாறாம்.

காலமாவன, நற்காலமும் தீக்காலமும் என்பன.

மணமெட்டாவன :

"ஒப்பானுக் கொப்பாளோர் பூப்பு நிகழ்ந்தபி
னிப்பான் மதிதோன்றா வெல்லைக்க--ணப்பாற்
றருமமே போற்றீமுன் றக்கானுக் கீதல்
பிரமமே யென்ப பெயர்."

என்பதனாற் பிரம மறிக.

"கொடுப்பான் கொடுத்துழிக் கொண்ட பொழுது
மடுப்பாங் கடுத்தற் கமைந்தார்--மடுப்பா
னிரண்டா மடங்குபே தித்தலே மாய
னிரண்டா மணத்தி னியல்பு".

என்றமையாற் பிரசாபத்திய மறிக.