50

மும், அவ்வியபாவ சமாசமும் என்று தொகைப்படுத்துச் சொல்லுவர் வடமொழிப் புலவர் (எ-று.)

'பல நெல் சமாசம்' என்பது, பலவென்னும் பொருளைப் பயக்கின்ற பகு என்னும் வடமொழியும், நெல் என்னும் பொருளைப் பயக்கின்ற விரீகி என்னும் வடமொழியுஞ் சேர்ந்த பகுவிரீகி என்னுஞ் சமாசமாம். 'பல நெல்' எனினும் 'பகுவிரீகி' எனினும் ஒக்கும்.

(2)

46. தற்புருட சமாசமும், துவிகு சமாசமும்

எழுவாய் முதலெழு வேற்றுமை யோடு மெழுந்தடையில்
வழுவாத நஞ்ஞொடெட் டாந்தற் புருடன்; வளர்துவிகு
தழுவார்ந்த எண்மொழி முன்னாய் வருந்தத் திதப்பொருண்மேல்
குழுவா ரொருமையொப் புப்பன்மை யொப்புக் குறியிரண்டே.

(இ-ள்.) தற்புருடத் தொகையானது எழுவாய் முதலாக ஏழு வேற்றுமையோடும் 4தடையில் நிகழாநின்ற நஞ்ஞோடுங் கூட எட்டு வகைப்படும்; துவிகுத் தொகையானது எண் முன்னாய் வருந் தத்திதப் பொருண்மேல் ஒருமையொப்புத் துவிகும், பன்மையொப்புத் துவிகும் என இரண்டு குறியினையுடைத்து; அவை எழுவாய் வேற்றுமைத் தற்புருடனும், இரண்டாம் வேற்றுமைத் தற்புருடனும், மூன்றாம் வேற்றுமைத் தற்புருடனும், நாலாம் வேற்றுமைத் தற்புருடனும், ஐந்தாம் வேற்றுமைத் தற்புருடனும், ஆறாம் வேற்றுமைத் தற்புருடனும், ஏழாம் வேற்றுமைத் தற்புருடனும், நஞ்ஞுத் தற்புருடனும் எனவும்; ஒருமையொப்புத் துவிகும், பன்மையொப்புத் துவிகும் எனவும் வரும் (எ-று.)

வரலாறு:-

கழஞ்சினுடைய அரை = அரைக் கழஞ்சு,
காசினுடைய கால் = காற்காசு,
அகத்தினுடைய கால் = காலகம்,
பகலினுடைய முன் = முன் பகல்,
ஊரினுடைய உள் = உள்ளூர்,
கையினுடைய புறம் = புறங்கை என வரும்.

இவை முன் பதம் எழுவாய் வேற்றுமையாதலின், எழுவாய் வேற்றுமைத் தற்புருடனாம்.


1. தடையில் - எதிர்மறைப் பொருளில்