54

ணம், 'குறுங்கொற்றன்' 'நெடுஞ்சாத்தன்' எனப் பண்பு மொழி முன்பு நிற்றலான் முன்மொழிப் பண்புத் தொகையாயிற்று.

பண்பு எனினும் விசேடணம் எனினும் ஒக்கும்.

1குறுவும் அதுவே மையும் அதுவே எனக் குறுமை ஆயிற்று. இது பண்பு மொழியே முன்னும் பின்னும் நிற்றலால் இருமொழிப் பண்புத் தொகை.

ஆணிவன் மாணிக்கமொத்தலால், ஆண் மாணிக்கம். பெண்ணிவள் அணங்கொத்தலால், பெண்ணணங்கு. இவை ஒப்பு மொழி பின்பு நிற்றலால், பின்மொழி ஒப்புத்தொகை.

ஒப்பு எனினும் உவமை எனினும் ஒக்கும். பின்மொழி ஒப்புத் தொகையெனினும், பின்மொழி உவமைத் தொகை எனினும் ஒக்கும்.

பவளம் போற் செவ்வாய், பவள வாய், அஞ்சனம் போற் கரிய கண், அஞ்சனக் கண். இவை ஒப்பு மொழி முன்பு நிற்றலான், முன்மொழி ஒப்புத் தொகை.

அடையாது என்று கருதப்பட்ட நெடுங்கடை, அடையா நெடுங்கடை. இதனுள் கருதின மொழி முன்பு நிற்றலான், முன்மொழிக் கருத்துத் தொகை.

மருந்தே என்று துணியப்பட்ட மரம், மருந்து மரம். நஞ்செனத் துணியப்பட்ட மரம், நச்சு மரம். இவையிற்றில் துணிந்த மொழி முன்பு நிற்றலான், முன்மொழித் துணிவுத் தொகை எனப்பட்டது.

`முன்மொழிக் கருத்துத் தொகைக்கும் முன்மொழித் துணிவுத் தொகைக்கும் வேறுபாடியாது?' எனின், கருதினது மாத்திரமே அன்றித் துணிந்தும் உளன் என்று வேறு படுக்கத் துணிந்தபொழுது முன்மொழித் துணிவுத் தொகையாம்; துணியாதே கருத்து மாத்திரமாம் பொழுது முன்மொழிக் கருத்துத் தொகையாம். ஆகையால், பல படிக்கும் ஒத்திருக்குந் தொகையும் உளவாம் என்றறிக.


1"குறுமையின் விகாரமே குறுவாதலானும், இருமொழிப் புணர்ச்சி இன்மையானும், "இரு சொல்லும் ஒரு பொருளனவாய் இன்னதிது வென ஒன்றையொன்று பொதுமை நீக்கி" எனக் கூறிய ஆசிரியர் சேனாவரையர் உரைக்கு மாறுபடுதலானும், தொகை என்று ஒன்று ஆங்கு நிகழாமையானும், உரையாசிரியர் கூற்றுச் சரியன்றென மறுக்க. கருமையுமதுவே செம்மையுமதுவே எனக 'கருஞ்சிவப்பு' எனவும், சிறுமையுமதுவே வெம்மையுமதுவே எனச் 'சிறுவெம்மை' எனவும் வருவனவும், இன்ன பிறவும் நூலாசிரியர் கருத்தென்க," என்பது பழைய குறிப்பு.