59

இனிக் கிடப்புத் தொகையும், மாறிடு தொகையும், நித்தத் தொகையும், அழிதொகையும், அழியாத் தொகையும் எனக் கூறு படுப்பாருமுளர்.

அவையாமாறு :

'மாங்காய், பலாக்காய்' என முன்மொழியும் பின்மொழியும் மாறாடாதே கிடப்பிலே நின்று தொக்கமையாற் கிடப்புத்தொகை.

'முன்றில், வாயில்' என முன்மொழி பின்னாய்ப் பின்மொழி முன்னாய் மாறாடி வந்தமையான் மாறாடு தொகை.

'செம்போத்து, குறுமரை, கருங்காக்கை' என ஏகாந்தித்துக் கிடத்தலால் நித்தத் தொகை.

'சாத்தன் மகன், எண்ணெய், எருமைப் பால்' என வேற்றுமை அழிந்து தொகுவன அழிதொகை.

'கழுத்திலாடை, பொதும்பில் தேன்' என வேற்றுமை அழியாது தொகுவன அழியாத் தொகை.

'முன்பொரு சூத்திரத்தின்கண் நடுவு நின்ற வேற்றுமையைச் சார்ந்த சொல்லும் அழியும் எனச் சொல்லி, போன சூத்திரத்தினும் நடுவு நின்ற சொல் அழியும் என்று சொன்னாராதலின் கூறியது கூறல் என்னும் குற்றம் உண்டோ?' எனில், அற்றன்று; முன்பிற்போன சூத்திரத்திற் காரக பத வேற்றுமையும் அதனைச் சார்ந்த சொல்லுமே அழிவன. இதனால், காரக பத வேற்றுமையும் கிரியா பத வேற்றுமையும், முற்சார்வு பதமும், அந்தமும், துவாந்தமும், சந்திராந்தமும் அழிந்து தொகப்பெறும்.

(8)

தொகைப்படலம் முற்றும்.