61

நிகழும்; 1 அவையிற்றைக் கூற்றறுத்துப் பொச்சமடக்குதல் எண்ணிறந்த கிரந்தத்தாற் சொல் முடிக்கினுந் தெய்வப் புலவர்களுக்கும் அரிதாம் (எ-று.)

அரிதாவதற்குக் காரணம் இலக்கியத்தைப் பார்த்து இலக்கணஞ் சொன்னமையின் என்க.

அவையிற்றிற்கு உதாரணம் வருமாறு:

வலையினாலுண்பான், வலையன்; ஞகரம் ஆகமமாய், வலைஞன் என்றுமாம்.

வேதத்தை உரைப்பான், வேதியன்; இதில் அம்மென்னுங் கடைச் சொற்குறைந்தது.

கொந்தத்தையுடையான், கொந்தவன் ; இதில் ஈறழிந்தது.

மருந்தைப் பண்ணுவான், மருத்துவன் ; மெல்லொற்று வல்லொற்றாயிற்று.

கூத்துப் பயிலுவான், கூத்தன்.
வல்லினாற் பயன் கொள்வான், வல்லி.
சோதிடத்தை எண்ணுவான், சோதிடவன்.

அதிதி மகன், ஆதித்தியன் ; இதில் கடை குறைந்து நடுவே தகர ஒற்று ஆகமமாய், முதற்கண் அகரம் விருத்தியானது.

திதி மகன், தைத்தியன் ; விநதை மகன், வைநதேயன் ; வயின தேயனெனவும் வரும். கங்கை புத்திரன், காங்கேயன்.

சிபி வருக்கத்தான், செம்பியன் ; இதில் நடுவே மகரவொற்று ஆகமமாய், முதற்கண் இகரங் குணமானது.

குரு வருக்கத்தான், கௌரவன் ; இதில் முதற்கண் உகரம் விருத்தியானது.

புத்தனைத் தெய்வமாயுடையான், பௌத்தன் ; இது சுப்பிரத்தியத்தால் முதல் விருத்தி பெற்றது.

சிவனைத் தெய்வமாக உடையான், சைவன் ; பசுபதியைத் தெய்வமாக உடையான், பாசுபதன்.

ஆதி என்றதனால் பிற பொருள்களின்கண் நிகழுமாறு:

பூனைக்காலை ஒப்பக் காய்ப்பது, பூனைக் காலி.

குலத்தினுள் விழுமியான், குலீனன் ; சிங்களவன் பேசுவது, சிங்களம் ; வடுகன் பேசுவது, வடுகு ; துளுவன் பேசுவது, துளுவு ; வியாகரணமோதுவான், வையாகரணன்.


1 'எண்ணிறந்த கிரந்தத்தால் சொற்களைச் சொல்லி முடிக்கிலும் அவையிற்றைக் கூற்றறுத்துப் பொச்சமடக்குதல் தெய்வப் புலவர்களுக்கும் அரிதாம்' என இயைக்க.