62

துவாரத்தில் நிற்பான், தௌவாரிகன் ; குணத்தை நன்றாக உடையான், குணவான் ; குணவதி. மதியை நன்றாக உடையான், மதிமான் ; கள்ளத்தை உடையான், கள்ளன் ; இவன் தன்மை கள்ளம் எனினுமமையும்.

குங்குமத்தால் ஊட்டப்பட்டது, கௌங்குமம் ; இருடி சம்பந்தமானது, ஆரிடம் ; இதில் இருவினுக்கு ஆர் என்னும் ஆதேசம் ஆகி, இகரம் உலோபமானது.

பார்ப்பானாற் செயற்படுவது, பார்ப்பு. இவ்வண்ணம் 'கொல்லி, தச்சு' என முடியும். சொற்கள் ஒன்றையொன்று காதலித்துக் கிடத்தலால், இவற்றினின்றே கொல்லன், தச்சன் என முடிந்தது எனினுமமையும்.

இனிப் பிரத்தியங்களான் முடியுமாறு:

1அம்பு என்பது நீர் ; பங்கம் என்பது சேறு; இவற்றுள் தோன்றியது 'அம்புசம், பங்கசம்' என வரும்.

குறிப்புச் சொற்களும், வினைச் சொற்களும், பிறவும் ஒரு பெயர்ச்சொல் தம்மேலேறிய பிரத்தியத்தையுடையவாய் வேறுபொருள் பயந்து நிற்பின், அவை தத்திதப் பெயர்கள் என்றறிந்து உலகிற்கு ஒப்ப முடிக்க.

(2, 3)

55. குணக்குறிப்பையும் பொருள்களையும் விளக்க வரும் பிரத்தியங்கள்

மையம் புதுவுகம் வல்லள வாதி குணக்குறிப்பில்
வையம் வலிநெடு வாதிபின் னாம்மன்கன் னானன்வன்னாள்
ஐய மவனவள் மிம்முத லாகுந் திரப்பியத்திற்
பைய மதிக்க வுலகத் தவர்க்குப் பயன்படவே.

(இ-ள்.) மை, அம், பு, து, வு, கம், வல், அளவு என்னும் இவை முதலாகிய பிரத்தியங்கள் வலி நெடு என்னுஞ் சொல் முதலாகிய பிரகிருதி குணத்தின் பின் குணக்குறிப்பை விளக்குதற் பொருட்டு வரும் ; மன், கன், ஆன், அன், வன், ஆள், ஐ, அம், அவன், அவள், மி முதலாகிய பிரத்தியங்கள் 2திரப்பியம் என்னும்


1'அம்பு, பங்கம் என்பன தனிப் பிரத்தியங்கள் அல்ல; ஆதலின், மேல் எடுத்துக்காட்டுத் தவறென்க. அநுசன், தத்துவம், உபகாரம், பிரஞ்ஞை, சங்கரன் முதலிய பதங்களே தக்க உதாரணங்களாம்' என்பது பழைய குறிப்பு.

2"பருப்பதம், காப்பியம், காந்தர்ப்பம், சருப்பதோபத்திரம் என்றற்றொடக்கத்தனவொப்ப, திரவியமென்னும் வடமொழி தமிழில் திரப்பியமெனத் திரிந்தது. இதனை மேல் அலங்காராதிகாரத்தில் வரும் 'திரப்பியஞ் சாதி தொழில்குணம்' என்னும் பத்தாவது கட்டளைக் கலித்துறையானும் உணர்க," என்பது பழைய குறிப்பு.