63

பொருள்களை விளக்குதற்பொருட்டு வரும். இவையாக்கும் பொழுது உலகத்தார்க்கு ஒத்துப் பயன் புணரவேயாக்குக (எ-று.)

வலி, நெடு முதலாகிய பிரகிருதி குணமாவது வலி, நெடு, குறு, கரு, பசு, வெளு, கெடு, இள, தண், வெம், அரி, எளி, பெரு, சிறு, பரு, நேர், மலி என இவை முதலாக வரும்.

உதாரணம் வருமாறு:

மை-வலிமை, நெடுமை, குறுமை; அம்-நீளம்; இதில் நெடு, நீள் என ஆதேசமாயிற்று. பு-அலிப்பு, மெலிப்பு; து-வலிது, மெலிது; வு-வலிவு, மெலிவு; கம்-குறுக்கம்; வல் - இளவல்; அளவு - தண்ணளவு; பிறவுமன்ன.

இவ்விலக்கணத்தால் திரப்பியப் பிரத்தியங்கள் விளங்கி முடியுமாறு:

குறுமன், கருமன் எனவும்; சிறுக்கன் எனவும்; அரியான், எளியான் எனவும்; கரியன், குறியன் எனவும்; புலவன், சிறுவன் எனவும்; செய்யாள், கரியாள் எனவும்; வெள்ளை, பச்சை எனவும்; புறம், அகம் எனவும்; கரியவள், குறியவள் எனவும்; கரியவள், குறியவள் எனவும்; கருமி, குறுமி எனவும் கொள்க.

(4)

56. பெண்பாற்பெயரின் வரும் பிரத்தியங்கள்

அச்சியொ டாட்டி யனியாத் தியத்தி தியாளொடள்ளி
இச்சிசி யாதியும் பெண்மைத் தெளிவாம்; எழில்வடநூல்
மெச்சிய வாகாராந் தத்தினு மூர்ப்பின்னு மிக்க ஐயாம்;
நச்சிய ஈகாரந் தானே குறுகும் நறுநுதலே !

(இ-ள்.) அச்சி, ஆட்டி, அனி, ஆத்தி, அத்தி, தி, ஆள், அள், இ, இச்சி, சி முதலாகிய பிரத்தியங்கள் பெண்மையை விளக்கும் பிரத்தியங்களாம்; பெண்ணைக் குறித்த பொழுது எல்லாச் சொற்களின் மரபும் பிழையாமற் சொல்லிக்கொள்க. எல்லாச் சொல்லுமாவன, சாதியைச் சொன்ன சொல்லும், குணத்தைச் சொன்ன சொல்லும், கிரியையைச் சொன்ன சொல்லும், திரப்பியத்தைச் சொன்ன சொல்லும் எனவே அடங்கும்; வடநூலிற் பெண்ணைக் குறித்து வந்த ஆகாராந்தச் சொற்களின் பின்னும் ஊரைச் சொல்லுஞ் சொற்களின் பின்னும் ஐகாரம் வரும்; ஈகாராந்தம் தானே குறுகும் (எ-று.)