70

சுப்பிரத்தியத்தான் விதை, அவிழ், பார், சரி, மடி முதலிய கொள்க. இனி, சுப்பிரத்தியத்தான் எண், பண் எனக் கடை குறைந்தும், தீன், ஊண், வீடு என விகாரப்பட்டும் வருவனவுமாம்.

இவை காரகத்தினும் வினைக்குறிப்பினும் போதித்தவாறு:-

தறிக்கப்படுதலால் தறி, முறிக்கப்படுதலால் முறி, பொதியப்படுதலால் பொதி எனவும்; இவ்வண்ணம் துளை, விதி, உரி எனவும் கருமக் காரகத்தில் முடிந்தன.

விளக்குதலால் விளக்கு எனவும்; இவ்வண்ணம் அறிவு, சாவு எனவும்; கருத்தாக் காரகத்தில் முடிந்தன. இதனால் அணிவதென்பது அணி எனவும்; இவ்வண்ணம் மொழி, பேச்சு, உடை எனவும் கரணக் காரகத்தில் முடிந்தன.

இதனினின்றும் கழிவர் என்பது கழி எனவும்; இவ்வண்ணம் உறை, வீடு எனவும் அவதிக் காரகத்தில் முடிந்தன. இதன்கட் சுடுவார் என்பது சுடலை என ஆதாரக் காரகத்தில் முடிந்தது.

கேட்டல், அறிதல், சாதல், போதல் எனவும்; வீடு, கூடு, கூத்து, நோக்கு, காட்சி, சரி, காவல், ஆட்டம், ஓட்டு எனவும் வினைக்குறிப்பின் முடிந்தன. வினைக்குறிப்பாவது, வடநூலிற் பாவமென்பது; இதில் ப இருபத்து நாலாம் வியஞ்சனம்.

இனி முன்பு சில பெயர் நின்று பின்பு தாது பெற்றுப் பிரத்தியங்களான் முடியுமாறு :-

கூத்தாடி, நீறணிந்தான், அம்பலத்தாடி, பாம்பழிவுண்ணி, முற்சொல்லி, ஆறுகாட்டி, ஊடுபோகி, நாடுகாணி, கண்கட்டு, பழியஞ்சி, புகழேந்தி என வரும். பிரத்தியசாதி பதத்துடன் பிரத்தியங்களுங் கூட்டிப் பெயர்ச்சொற்களை எல்லாம் வடமொழித் தாதுவிலே பொருந்துவன அறிந்து முடிக்க. அவை முடிக்குமாறு:

(3)

63. வடமொழித் தாதுக்களோடு பிரத்தியங்கள் கூடி முடியும் வகை

தம்மந்தி கன்வம் மனமணந் தன்னக னக்கொடியுச்
சம்மன் மமையகஞ் சர்திர மாவாயு வல்லில்மியான்
கம்மன் தவங்கல் முதலா யினதெய்வத் தாதுவின்கண்
விம்ம வருங்கா ரகத்தும் வினைக்குறிப் பின்கணுமே.

(இ-ள்.) தம், அம், தி, கன், வம், அனம், அணம், தன், அகன், அக்கு, இ, உ, சம், மன், மம், ஐ, அகம், சர், திரம், ஆ, ஆயு, அல், இல், மி, ஆன், கம், அன், தவம், கல் என்னும் இவை முதலாய்க் கிடந்த  பிரத்தியங்களும், பிறவும் வடமொழித் தாதுவிற் காரகப் பொருளினும் வினைக்குறிப்பினும் வரும் (எ-று.)