71

அவை வருமிடத்துத் தாதுப் பெயர் அனேகமாகையால், தாதுப் படலத்திற் கிடந்த பொருண்மேலும், அன்றியே முன்புண்டாய்க் கிடந்த சொல்லை முடித்துக் காட்டுகின்றமையால், அச்சொல்லின் பொருண்மேலும், தக்க பிரத்தியத்தால் தாதுவிற் பொருளாக்கி முடிக்க. அது தாதுப் படலத்திற் கிடந்த பொருளிலே முடித்தற்கு அரிதாதலிற் செய்யும்படி அறிந்து முன் சொன்ன விகாரங்கள் வேண்டும் இடமறிந்து இயற்றி முடிக்க. இப்படி முடிக்க எல்லாப் பெயர்ச்சொல்லும் முடிவனவாம். பிராதிபதிகமும், 1சாதியும், உடன் பிரத்தியமும், தாதுவும் முடித்தற்கரிய என்பாருமுளர். முடிப்பான் பக்கம் வலியுடைத்து. 2பிராதியில் அநுராகம், விகாரம், உபகாரம் முதலிய பிராதியிலும், ஓங்காரம், அலங்காரம் முதலிய பிராதியிலும் முடிந்து வடமொழித் தாதுக்கள் கிடந்தன எனக் கொள்க. பொருள் தெரியாத தாதுக்களையும் ஒரு சொல்லான் முடிக்க என்றால் இச்சொல்லாக முடிக்க என்றாய்ந்து, சொன்ன தாதுவிற் பிரத்தியம் வரின் முடியும் என்று கருதி, வேண்டும் விகாரங்களான் முடிக்க. இதற்குக் குணமும் விருத்தியும் வருக்கக் கிடப்பு எனக் கொள்க.

(4)

64. சில தாதுக்கள் அடையும் விகாரங்கள்

அய்யா யிகராந்த மவ்வா வுகராந்த மாவிமுன்பு
நையாது நிற்கும் பிரத்தியம் பின்வரின்; நற்குணமும்
பொய்யா விருத்தியும் ஓரோ விடத்துப் புகழ்பெயர்ச்சொல்
உய்யா தொழியில் விகாரத்தை யோர்ந்துகொ ளொண்ணுதலே !

(இ-ள்.) உயிர் முன்னாகிய பிரத்தியம் பின்பு வரில் வடமொழித்தாதுவில் இகாராந்தம் ஆன தாதுக்கள் எல்லாம் அய், ஆய் என்னும் இரண்டனையும் அந்தமாக உடையவாம்; உகாராந்தம் ஆன தாதுக்கள் எல்லாம் அவ், ஆவ் என்னும் இரண்டனையும் அந்தமாக உடையவாம்; தாதுக்கள் தமக்கொத்த குணமும், விருத்தியும் ஏற்று வருவனவன்றாயின், வரும் விகார வேறுபாடுகளை ஓர்ந்துகொள்க. இவை முடிக்குமிடத்து முன் சொன்னவை


1 'ச ஆதியான பிரத்தியத் தொகுதியைச் சாதி என்றார்.'

2 'பிராதி தாதுவின் முன் வரும் உபசர்க்கம்.'-- இவை பழைய குறிப்பாம்.